பாரம்மா…பாரம்மா…
ஆடும் மயிலைப் பாரம்மா – அதன்
அழகே மயக்கும் தானம்மா!
ஓடும் மானைப் பாரம்மா – அஃது
உன்னைக் கவரும் தானமம்மா!
பாயும் புலியைப் பாரம்மா – அது
பதுங்கிப் பாய்ந்திடும் தானம்மா!
மேயும் பசுவைப் பாரம்மா – அதன்
*மேன்மை பாலால் தானம்மா!
திருட்டுப் பூனை பாரம்மா – அது
தேடும் எலியைத் தானம்மா!
கருப்புக் காக்கை பாரம்மா – அது
*கரந்து வாழும் தானம்மா!
கூவும் குயிலைப் பாரம்மா – அதன்
குரலோ இனிமை தானம்மா!
தாவும் குரங்கைப் பாரம்மா – தன்
குட்டியைக் காக்கும் தானம்மா!
நாயின் வாலைப் பாரம்மா – அதில்
நன்றி தெரியும் தானம்மா!
பேசும் கிளியைப் பாரம்மா – அதன்
பேச்சும் இனிமை தானம்மா! <
– அழகுநிலவன், புதுக்கோட்டை