இடர்மீட்புத் தொடர் : மீள்வோம் மீட்போம்!
பூமி
நாம் பூமியில் ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள் பற்றிப் பார்த்தோம். முதலில் நாம் வாழும் பூமியைப் பற்றித் தெரிந்து கொண்டு அடுத்த அடுத்த கட்டுரையில் மீண்டும் பேரிடர்கள் பற்றி பார்க்கலாம்.
நம்ம வாழும் இடத்தைப் பற்றி, கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?
நாம குடியிருக்கிற, வசிக்கும் வீடு, அந்தத் தெரு, அந்த ஊர், அந்த நகரம், அந்த வட்டம், அந்த மாவட்டம். இவை இருக்கிறது தமிழ்நாட்டில், அப்புறம் தென்னிந்தியா, இந்தியா, ஆசியா கண்டம், அப்புறம் உலகம் அப்படின்னு சொல்லப்படுற நம்ம பூமி உருண்டை.
நாம் வாழும் பூமியோட விட்டம் (Diameter) 12,756 கிலோமீட்டர். சரி, சூரியனுடைய விட்டம் எவ்வளவு தெரியுமா? 13,92,000 கிலோமீட்டர். பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் 15 கோடி கிலோ மீட்டர். நம்ம பூமி சூரியன், சந்திரன் இது எல்லாம் இருக்கிற இடத்துக்குப் பேரு பால் வெளி மண்டலம் (Milky way). அதனுடைய விட்டம் 1,20,000 ஒளி ஆண்டுகள் (Light year).
இப்ப நமக்கு ஒளி ஆண்டுன்னா என்னன்னு தெரியணும். ஒளி (Light) போற வேகத்துல (speed) ஓர் ஆண்டு போயிட்டே இருந்தா எவ்வளவு தூரம் போய்ச் சேருமோ அதுதான் ஓர் ஒளி ஆண்டு. ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் (300000 வூ 60நொடி வூ 60நிமிடம் வூ 24மணி வூ 365நாள்) 9460800000000 கிமீ அல்லது 9.46 பேட்டா மீட்டர் என்பது ஓர் ஒளி ஆண்டு.
1,20,000 ஆண்டுகள் ஒளி வேகத்துல நம்ம போயிட்டே இருந்தோம்னா அதுதான் பால் வெளி மண்டலத்தோட அகலம் அல்லது விட்டம் – இந்தக் கோடியில் இருந்து அந்தக் கோடிக்குப் போய்ச் சேர ஆகும் காலம்.
இந்தியாவுல நம்ம வீடுங்கறது நம்ம தெருவுல ஒரு கடுகு (Mustard) போல. அதேபோல் பால் வெளி மண்டலத்துடன் ஒப்பிடும்பொழுது நமது பூமி இந்தியாவிலேயே ஒரு கடுகு போல என்றால் இதைக் கற்பனை செய்து பாருங்கள்.
ஒலி (Sound) வேகம் நொடிக்கு 330 மீட்டர். ஒளி (Light) வேகம் 3 லட்சம் கிலோமீட்டர் நொடி க்கு. அதனாலதான் இடியும் மின்னலும் ஒரே நேரத்துல தோன்றினாலும் மின்னல் நம்ம கண்ணுக்குத் தெரிஞ்சு ரொம்ப நேரம் கழிச்சுத்தான் இடிச் சத்தம் கேட்கிறது. மின்னல் (ஒளி) நொடியில் வேகமா தெரிந்துவிடும். சத்தம் (Sound) பிறகு கேட்கும்.
சூரிய வெளிச்சம் சூரியனிலிருந்து பூமிக்கு வந்து சேர 8.16 நிமிடங்கள் ஆகும். நிலா வெளிச்சம் நிலாவில் இருந்து பூமிக்கு வந்து சேர 1.3 நொடிகள் ஆகும்.
சூரியன் பூமியை விட 109 மடங்கு பெரியது 10000 டிகிரி ஃபாரன்ஹீட்டில் சூடாக இருக்கும். இரும்பு 1500குநீ சூட்டில் உருகி விடும் என்றால் சூரியன் அருகில் அல்ல, பல லட்சம் கிலோமீட்டர் செல்லும் முன்னரே நாம் உருகி விடுவோம்.
உலகத்துடன் ஒப்பிடும் பொழுது நாம் ஒரு சிறு புள்ளி. பல கோடிக்கணக்கான ஆண்டுகள் வரலாறு கொண்ட பூமியில் நம்முடைய ஆயுட்காலம் என்பது மிக மிகச் சிறிய ஒரு பங்கு. இதில் வீண் பெருமை, பொறாமை, ஜாதி, மத, இன வேறுபாடுகள், கடவுள், பேய், பூதம் ஆகிய கற்பனைகள் இவற்றையெல்லாம் அறிவியல் பார்வையோடு அணுகி தெளிவு பெறுவோம்.