பெரியார் பெரியார்தான்
பெரியார் என்றும் பெரியார்தான்
பெயருக் கேற்ப பெரியார்தான்
அறிஞர்க் கெல்லாம் அரிதாவார்
அவனியில் பெரியார் பெரியார்தான்!
அறிவின் வழியில் சென்றிடவே
ஆக்கம் தந்தவர் பெரியார்தான்
அறிவால் உயர்ந்தார் பெரியார்தான்
அறியா தவர்கள் சிறியார்தான்!
மூடப் பழக்க வழக்கத்தில்
மூழ்க வேண்டா எனச் சொல்லி
சாடி னாரே பெரியார்தான்
சரித்திரம் போற்றும் பெரியார்தான்!
அறிவு வளர விளக்கானார்
அறியா மைக்கவர் சவுக்கானார்
சரியெனில் ஏற்றுக் கொள்என்றார்
தவறெனில் விட்டுச் செல்என்றார்!
பெண்கள் கல்வி முதன்மையென
பெரிதாய்ச் சொன்னது பெரியார்தான்
பெண்ணும் ஆணும் சமவுரிமை
பெற்றிட வைத்தவர் பெரியார்தான்!
வைக்கம் வீரர் பெரியார்தான்
வையம் போற்றும் பெரியார்தான்
தயக்கம் இன்றி தன்கருத்தில்
தெளிவாய் இருந்ததும் பெரியார்தான்!<
– அருப்புக்கோட்டை செல்வம்