சுற்றிலும் கற்போம்!
வஞ்சம் இல்லாப் பறவைகள்
வானில் பறப்பதைப் பாருங்கள்!
சூழ்ச்சி பண்ணத் தெரியாத
சுற்றும் காகம் பாருங்கள்!
நன்றியை என்றும் மறவாத
நாய்களைத் தெருவில் பாருங்கள்!
துரோகம் நினைக்கத் தெரியாத
தாவும் குரங்கைப் பாருங்கள்!
திருட்டு எண்ணம் இல்லாத
தங்கப் பசுவைப் பாருங்கள்!
கள்ளம் கபடம் இல்லாத
குதிக்கும் முயலைப் பாருங்கள்!
பலத்தைக் காட்டும் யானையும்
பணிவாய்ப் பழகும் பாருங்கள்!
சுற்றிலும் எங்கும் சுற்றங்கள்!
கற்போம் அவரிடம் வாருங்கள்!
– கவிஞர் விண்மீன்