• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அறியாமை தேயும்

2022_May_01
பாடல்கள்மே 2022

பாட நூல்க ளோடு – நீயும்
படிப்பாய் பலவகை  ஏடு!
கிடைக்கும் இன்பம் அறிவு – அதில்
கிட்டும் சிந்தனைச் செறிவு!

நூலகம் சென்று படிப்பாய் – நல்ல
நூல்களைத் தேடிக் குவிப்பாய்!
உலகம் உன்னில் விரியும் – உன்
உயர்வு கண்ணில் தெரியும்!!

நாளிதழ் வாரம் மாதம் – என்றே
நன்றாகும் இதழின் கீதம்!
வாளினும்  கூர்மை  எழுத்து! – அதை
வாசிப்பாய் கண்கள் விழித்து!

சிறுவர் கதைகள் பாடல்களை – நீ
சிறப்பாய்ப் படித்திடத் தேடியலை!
பெருகும்  கற்பனை  வளத்தாலே -உன்னைப்
பேர்பெற வைத்திடும் எழுத்தாலே!

பாடத்தைத் தவிரப் பிறநூல் – எதையும்
படிக்காதே என்பவர் பதர்நெல்!
தேடியே நூல்பல கற்றால் – வாழ்க்கை
தெளிந்து ஒளிவீசும் அவற்றால்!

அறிஞர் பலரின் உயர்வு – நூல்கள்
ஆய்ந்ததால்  வந்த அறிவு!
அறிஞர் ஆக நீயும் – பன்னூல்
அறிந்தால் அறியாமை தேயும்!

– கோவி. பால. முருகு, வடலூர்

23
அசத்தும் அறிவியல்!அசத்தும் அறிவியல்!3rd May 2022
கணிதப் புதிர் சுடோகு3rd May 2022கணிதப் புதிர் சுடோகு

மற்ற படைப்புகள்

1
2024செப்டம்பர் 2024பாடல்கள்
2nd September 2024 by - ஆ.ச.மாரியப்பன்

சிறுவர் பாடல்: தோப்பு மரங்கள்

Read More
2022_oct_1
அக்டோபர் 2022பாடல்கள்
5th October 2022 by ஆசிரியர்

நோயின்றி வாழ..!

Read More
18
ஆகஸ்ட் 2024பாடல்கள்பிஞ்சு 2024
1st August 2024 by முனைவர் முரசு நெடுமாறன்

சிறார் பாடல்: பால் குடமும் நீர்க்குடமும்

Read More
2020_aug_v17
ஆகஸ்ட் 2020பாடல்கள்
1st September 2020 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! -செம்மொழியான தமிழ்மொழியாம்

Read More
1
ஜுலை,2025பாடல்கள்பிஞ்சு 2025
2nd July 2025 by Periyar Pinju

விந்தையான தோழன் !

Read More
5
ஜூலை 2025பாடல்கள்பிஞ்சு 2025
2nd July 2025 by Periyar Pinju

வாசிப்போம் – நேசிப்போம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p