• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

புகழ் பெற்றிடுவாய்

22
பாடல்கள்பிஞ்சு 2024மார்ச் 2024
படுக்கையை விட்டே எழுந்தவுடன் – நீ
பாயைச் சுருட்டி வைத்திடுவாய்!
துடுக்காய் காலைக் கடன் முடிப்பாய் – நீ
துணிவை மனதில் தினம்வளர்ப்பாய்!
வீட்டுப் பாடம் எழுதிடுவாய் – நீ
விரைவாய்ப் பள்ளி கிளம்பிடுவாய்!
நாட்டு நடப்பும் அறிந்திடுவாய் – நீ
நல்லவை யாவும் கற்றிடுவாய்!
பள்ளியில் அன்பாய்ப் பழகிடுவாய் – தமிழ்ப்
பாட்டை இசையாய்ப் பாடிடுவாய்!
கள்வரைக் கண்டால் அஞ்சாதே – கொடுங்
கயமை வஞ்சகம் எண்ணாதே!
அன்னை தந்தை நல்லவர்கள் – உன்மேல்
அன்பு பாசம் கொண்டவர்கள்
என்றும் பள்ளி ஆசான்கள் – பாடம்
இனிதாய்க் கசடறத் தருபவர்கள்!
மூத்தோர் வார்த்தை செவிமடுப்பாய் – எனினும்
முடிவை அறிவால் நீ எடுப்பாய்!
ஈதல் இசைபட வாழ்ந்திட்டால் – நம்மை
ஈன்றோர் வாழ்வில் பெரிதுவப்பார்!
எச்சில் எங்கும் துப்பாதே – நீ
எவரையும் பள்ளியில் ஏசாதே!
இச்செகம் போற்ற வாழ்ந்திடுவாய் – புகழ்
எட்டுத் திக்கும் அளந்திடுவாய்!
– ஆ.ச. மாரியப்பன், புதுக்கோட்டை
பண்ணமைத்துப் பாடி வாட்ஸ் அப் மூலம் எங்களுக்கு அனுப்புங்கள்! சிறந்த பாடல்கள் பெரியார் பிஞ்சு Youtube-லும் இணைய தளத்திலும் வெளியிடப்படும்.
20
பறவைகள் அறிவோம் : இருவாச்சிபறவைகள் அறிவோம் : இருவாச்சி9th March 2024
செய்தித்தாள் படி!2nd April 2024செய்தித்தாள் படி!

மற்ற படைப்புகள்

10
ஆகஸ்ட் 2024கதைபிஞ்சு 2024
5th August 2024 by ஹூவாமை

இப்ப நான் என்ன சொல்றது? மறுபடியும் புதிதாய்ப் பிறந்தேன்!

Read More
ஜுன் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
5th June 2024 by என்.மணி, ஈரோடு

ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம், ஒவ்வொரு சுவை

Read More
17
சூழலியல்ஜூலை 2024பிஞ்சு 2024
16th July 2024 by பி.இளங்கோ

பறவைகள் அறிவோம் – 5 : பனங்காடை

Read More
24
நவம்பர் 2024பிஞ்சு 2024
4th November 2024 by ஆசிரியர்

எப்போ பழுக்கும்?

Read More
2
2024பொது அறிவுமே 2024
30th April 2024 by பெரியார் குமார்

பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி

Read More
11
கதைநவம்பர் 2024பிஞ்சு 2024
9th November 2024 by எழுத்து, ஓவியம்: மு.கலைவாணன்

தொடர் கதை : காட்டுவாசி – 3 : எங்க அந்தப் பசங்க?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p