ஓவியம் வரையலாம், வாங்க! மேசை விளக்கு
அன்பு பெரியார் பிஞ்சு நண்பர்களே! உங்களுக்குத் தேர்வு நேரங்களில் இரவிலும் படிக்க மேசை விளக்கு தேவைப்படுகிறது அல்லவா! அதை இன்றைக்கு வரைஞ்சு பார்க்கலாமா…
இதற்குத் தேவையான ஆங்கில எழுத்துக்கள் V, C, L மற்றும் இந்த முறை கேள்விக்குறியையும்(?) துணைக்கு அழைத்துக் கொள்வோம் நண்பர்களே!
ஓவியம் வரைவதற்கு பென்சில் மிக அவசியம். இன்றைய சந்தையில் பல்வேறு வகையான பென்சில்கள் கிடைக்கின்றன. அவை 2H, 2B, 4B, 6B, 8B, HB இன்னும் பல
2H – மெல்லியதாக எழுதக்கூடிய தன்மை உடையது.
2B – மென்மையானது அதேசமயம் கொஞ்சம் கருமையானது. அவுட்லைன் வரைவதற்குப் பயனுள்ளது.
4B – ஒளி வெளிச்சத்திற்கு இந்த பென்சிலைப் பயன்படுத்தலாம்.
6B – மற்ற பென்சிலைவிட மென்மையாகவும் அதேசமயம் கருமையாகவும் எழுதும்.
8B – மிகவும் கருமையானது ஒளி, நிழலுக்குப் பயன்படுத்தலாம். நாம் மென்மையாக எழுதினாலும் கருமை அதிகமாகவே தெரியும் பண்புடையது.
HB – நடுத்தரமான கருமை நிறம் கொண்டது.
இவ்வளவு பென்சில்கள் இருந்தால்தான் ஓவியம் வரைய முடியுமா என என்ன வேண்டாம். ஆரம்ப கால கட்டத்தில் HB பென்சிலே போதுமானது. மேலே குறிப்பிட்ட பென்சில் வகைகளை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே கூறியுள்ளோம்.
1, V எழுத்தை படுக்கை வசமாக எழுதவும்.
2. V இன் உட்பகுதியில் சிறிய அளவு இடைவெளிவிட்டு இரண்டு வளைவுக் கோடுகள் வரையவும்.
3. V இன் முன்பகுதியில் ‘C’ எழுத்தை எழுதவும். பிறகு வளைவுக் கோட்டின் உட்பகுதியில் படத்தில் காட்டியபடி வரைந்த பின்னர் தேவையற்ற கோடுகளை அழித்துவிடவும்.
4.‘C’ எழுத்துக்கு எதிர்ப்பக்கம் படத்தில் காட்டியபடி வளைவுக் கோடு கொண்டு
V இன் மேற்பகுதியை இணைக்கவும்.
5. பெரிய C இன் அருகில் சிறிய அளவில் இடைவெளிவிட்டு படத்தில் காட்டியபடி மீண்டும் C எழுத்தை எழுதவும்.
6. தேவையற்ற கோடுகளை அழிக்கவும். பின்னர் கேள்விக்குறியை (?) எழுதவும்.
7. அருகிலேயே மற்றொரு கேள்விக் குறியை வரைந்து இரண்டையும் இணைக்கவும். பிறகு கேள்விக் குறியின் அடிப்பகுதியில் ‘C’ எழுத்தைச் சற்றே சாய்வாக எழுதவும்.
8. படத்தில் காட்டியபடி L எழுத்தைத் தலைகீழாக எழுதிவிட்டு தேவையற்ற கோடுகளை அழிக்கவும். இப்பொழுது அழகிய செவ்வகம் உங்களுக்குக் கிடைத்திருக்கும்.
9. செவ்வகத்தின் அடிப்பகுதியில் படத்தில் காட்டியபடி மேடையை உருவாக்கவும்.
10. செவ்வக மேடையின்
மேல் பகுதியில் ‘சுவிட்ச்’
அமைப்புக்காக இரண்டு சிறிய செவ்வகங்களை
வரைந்துகொள்ளவும்.
இப்பொழுது உங்களுக்கு
மிக அழகான
மேஜை விளக்கு
கிடைத்திருக்கும்.