பார்த்துப் பார்த்து மகிழ்வோமே!
மல்லிகைப் பூவைப் பார்த்தாயா?
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேனே!
ரோசாப்பூவைப் பார்த்தாயா?
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேனே!
குளத்தில் தாமரை பார்த்தாயா?
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேனே!
அல்லியும் அங்கே பார்த்தாயா?
ஆமாம் பார்த்தேன் பார்த்தேனே!
பூக்கள் அழகாம் அழகாமே?
பார்த்துப் பார்த்து மகிழ்வோமே!
– முனைவர் முரசு நெடுமாறன்