சிறுவர் பாடல்: படிப்போம் பெரியார் பிஞ்சு!
படித்திடு பெரியார் பிஞ்சு – பொய்மை
புராணம் புரட்டதோ நஞ்சு! – மதுவைக்
குடித்திட நீயுமே அஞ்சு – செழுமைக்
குலைத்திடா இனிதுறத் துஞ்சு!
பிடிப்புடன் பகுத்துமே வாழ்வாய் – நித்தம்
பொங்கும் அன்பிலே ஆழ்வாய் – வீணே
நடிப்பதால் விரைந்துமே வீழ்வாய் – செம்மைசேர்
நற்குணப் பண்பிலே தாழ்வாய்!*
துடிப்புடன் கல்வியே கற்பாய் – கடமை
துயிலெழுந் தாற்றுவை பொற்பாய் – மறவா
படித்தவா றுலகிலே நிற்பாய் – நீயும்
பகுத்தறிந்து வாழ்வையே வெற்பாய்!
மடியதனை முற்றுமாய் ஓட்டுவாய் – வல்ல
மனிதநேயம் அதனை மீட்டுவாய் – ஒற்றுமைக்
கொடியினது கீழுலகைக் கூட்டுவாய் – இங்கு
கண்ணான வரலாறை நாட்டுவாய்.
பாவலர் பொன்னெழில் வாணன்,
சென்னை.