பொங்கல் திருநாள்
பொங்கல் திருநாள் வந்தால்
புதிய தெம்பு பிறக்கும்
பழையன எல்லாம் கழியும்
புதியன வீட்டில் பூக்கும்
எல்லார் முகத்திலும் மகிழ்ச்சி
எல்லார் வீட்டிலும் விருந்து
அம்மா பொங்கும் பொங்கல்
ஆகா எத்துணை இனிமை
உடன் பிறந்தார் போல
ஒன்று கூடும் விழாவாம்
பொங்கல் திருநாள் வந்தால்
புதிய தெம்பு பிறக்கும்!
– முனைவர் முரசு நெடுமாறன்