பிஞ்சு நூல் அறிமுகம்
அறிவியல் பொதிந்த
ஆங்கிலக் கவிதைகள்!
– முரளிகிருஷ்ணன் சின்னதுரை
பெருந்தொற்று காலத்தில் வளரிளம் பருவத்தை எட்டிய பெண் குழந்தை, தனது அனுபவங்களையும், உணர்வுகளையும் நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங்கிலச் சொற்களால் கவிதைகளாகப் படைத்திருக்கிறார். வளரிளம்பருவத்தில் உடலில் சுரக்கும் இயக்குநீர்களால் (hormones) ஏற்படும் உளவியல் உணர்வுகளையும் மிக அழகாக வெளிபடுத்தியிருக்கிறார் வளரிளங்கவிஞர் சாரல் சிந்தனா. 13 வயதிலிருந்து 15 வயது வரை எழுதப்பட்ட 50 ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பாக “A TEEN’S RHYTHM” எனும் தலைப்பில் மணிமேகலை பிரசுரம் வெளியிட்டுள்ளது. இந்த 50 கவிதைகளையும் சிந்தனைகள், உணர்வுகளும் உளவியலும், வாழ்க்கை நிகழ்வுகள், இலக்கியக் கனவுகள், கலைநயப் பார்வைகள், அர்ப்பணிப்பு ஆகிய பிரிவுகளில் வகைமைப் படுத்தியிருக்கிறார். ஆங்கிலக் கவிதைகளில், வேதியலும், இயற்பியலும், உடலியலும், உளவியலும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. பெரியார் பிஞ்சு சிந்தனாவிற்கு வாழ்த்துகள்!
நூல் பெயர்:
A Teen’s Rhythm
ஆசிரியர் : சாரல் சிந்தனா
பக்கங்கள் : 66
விலை : ரூ100/-
வெளியீடு :
மணிமேகலை பிரசுரம்,
எண்: 21, தணிகாச்சலம் சாலை, தியாகராய நகர்,
சென்னை – 600 017.