முதலிடம் பெறுவோம்!
![29](https://periyarpinju.com/wp-content/uploads/2025/01/29-1.jpg)
ஆண்டுத் தேர்வு வருகிறதே – நாம்
அனைத்துப் பாடமும் எழுதணுமே
வீணாய்க் காலம் கழிக்காமல் – தேர்வில்
வெற்றி பெற்றிட உழைக்கணுமே!
நித்தமும் காலையில் எழுவோமே – நாம்
நெஞ்சம் மகிழப் பயில்வோமே
அத்தனைக் கேள்விக்கும் விடையெழுதி -நாம்
அனைவரும் போற்றத் தேறிடுவோம்!
கல்வி கற்போம் கவனமுடன் – நாம்
கசடறக் கற்றே உயர்ந்திடுவோம்!
எல்லாத் தேர்வும் எழுதிடுவோம் – பெற்றோர்
இதயம் மகிழச் சிறந்திடுவோம்!
நித்தமும் பள்ளிக்குச் செல்வோமே – நமை
நெருங்கும் தேர்வினில் வெல்வோமே!
மொத்தமதிப் பெண்ணும் பெறுவோமே – நாம்
முதலிடம் பெற்றிட முயல்வோமே!
வெற்றி பெறுவோம் தேர்வினிலே – உயர்
வகுப்பில் அமர்வோம் சீர் பெறவே!
கற்றுப் பட்டங்கள் பெற்றிடுவோம் – உலகில்
கல்வி ஒன்றே உயர் செல்வம்!!
– ஆ.ச.மாரியப்பன்,
புதுக்கோட்டை.ஆண்டுத் தேர்வு வருகிறதே – நாம்
அனைத்துப் பாடமும் எழுதணுமே
வீணாய்க் காலம் கழிக்காமல் – தேர்வில்
வெற்றி பெற்றிட உழைக்கணுமே!
அனைத்துப் பாடமும் எழுதணுமே
வீணாய்க் காலம் கழிக்காமல் – தேர்வில்
வெற்றி பெற்றிட உழைக்கணுமே!
நித்தமும் காலையில் எழுவோமே – நாம்
நெஞ்சம் மகிழப் பயில்வோமே
அத்தனைக் கேள்விக்கும் விடையெழுதி -நாம்
அனைவரும் போற்றத் தேறிடுவோம்!
கல்வி கற்போம் கவனமுடன் – நாம்
கசடறக் கற்றே உயர்ந்திடுவோம்!
எல்லாத் தேர்வும் எழுதிடுவோம் – பெற்றோர்
இதயம் மகிழச் சிறந்திடுவோம்!
நித்தமும் பள்ளிக்குச் செல்வோமே – நமை
நெருங்கும் தேர்வினில் வெல்வோமே!
மொத்தமதிப் பெண்ணும் பெறுவோமே – நாம்
முதலிடம் பெற்றிட முயல்வோமே!
வெற்றி பெறுவோம் தேர்வினிலே – உயர்
வகுப்பில் அமர்வோம் சீர் பெறவே!
கற்றுப் பட்டங்கள் பெற்றிடுவோம் – உலகில்
கல்வி ஒன்றே உயர் செல்வம்!!
– ஆ.ச.மாரியப்பன்,
புதுக்கோட்டை.