• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

விலங்குகளைக் காப்போம்!

2023_feb_1
பாடல்கள்பிப்ரவரி2023

துள்ளித் திரியும் முயல்கூட்டம்;
தொட்டால் சுருளும் முள்பன்றி;*
புள்ளி மான்கள் பெருங்கூட்டம்;
புலியின் கோப உறுமல்கள்;

சீறும் சிறுத்தைப் பதுங்கல்கள்;
சிலிர்க்கும் சிங்கக் கர்ச்சனைகள்;
ஊறிக் கிடக்கும் நீர்யானை
உலவும் காண்டா மிருகம்தான்;

கூட்ட மாக யானைகள்
குரங்கின் கூட்டம் மரங்களிலே;
வேட்டை யாடும் வேங்கைகள்;
வீரம் நிறைந்த காட்டெருது;

ஒட்டகச் சிவிங்கி உயரம்காண்;
ஓநாய் நரிகள் கூட்டம்காண்
எட்ட நிற்கும் வரிக்குதிரை;
இடையே நகரும் மலைப்பாம்பு;

காட்டில் வாழும் விலங்குக்கு
கடின மான வாழ்க்கைதான்
வீட்டில் வளரும் நாய்பூனை
விருந்தைத் தினமும் சுவைத்திடுமே;

பட்டி தன்னில் ஆடுகள்தாம்;
பசுவும் கன்றும் தொழுவத்தில்;
முட்டித் தள்ளும் காளைக்கும்;
முழுதாய்க் காப்பு உழவனிடம்;

வண்டி இழுக்கும் குதிரைக்கும்
பொதியைச் சுமக்கும் கழுதைக்கும்
அண்டி வாழும் நிலைதனையே
ஆண்டாண் டுகளாய்த் தந்துவிட்டோம்

வனத்தை அழிக்கா திருந்திட்டால்
வாழும் காட்டில் விலங்குகள்தாம்;
மனமி ரங்கி விலங்குகளை
மனிதத் தோடு காத்திடுவோம்!

– கே.பி.பத்மநாபன்
கோவை

 

22
தங்கும் எங்கும் பேரின்பம்தங்கும் எங்கும் பேரின்பம்6th January 2023
பொங்கல் நாள் ஜனவரி 14 என்பது ஜனவரி 15 ஆக மாறிய மர்மம் என்ன?2nd February 2023பொங்கல் நாள் ஜனவரி 14 என்பது ஜனவரி 15 ஆக மாறிய மர்மம் என்ன?

மற்ற படைப்புகள்

2022_nov_43
நவம்பர் 2022பாடல்கள்
9th November 2022 by ஆசிரியர்

ஆற்றல் அறிவோம்

Read More
2022_june_pinju-june-2022-pages-final-3544
ஜூன் 2022பாடல்கள்
3rd June 2022 by ஆசிரியர்

முதியோரை வாழ்த்துவோம்

Read More
2019_nov_v42
நவம்பர் 2019பாடல்கள்
1st November 2019 by ஆசிரியர்

பேர் சொல்லும் பிள்ளைகள்!

Read More
2022_August_23
ஆகஸ்ட் 2022பாடல்கள்
2nd August 2022 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! இசை அமுதிலே

Read More
2023_feb_5
அறிவியல்பிப்ரவரி2023
2nd February 2023 by ஆசிரியர்

பொங்கல் நாள் ஜனவரி 14 என்பது ஜனவரி 15 ஆக மாறிய மர்மம் என்ன?

Read More
2022_mar_p35
பாடல்கள்மார்ச் 2022
3rd March 2022 by ஆசிரியர்

சேமிக்கச் செயல்படுவோம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p