பாரில் அழகான பாரிஸ்
-முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்
பாரிஸ் பிரான்சு நாட்டின் தலைநகரமும் அந்நாட்டிலுள்ள மிகப் பெரிய நகரமும் ஆகும். பாரிஸ் என்ற பெயர் ரோமர் இப்பகுதியை ஆக்கிரமித்த காலத்தில் அங்கே வாழ்ந்த கலிக் எனும் இனக்குழுவின் பெயரான பரிசிஸ் என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தது. கி.மு.52இல் ரோமர் வரும் வரை பாரிசில் வாழ்ந்து வந்த இனக்குழுவினரை ரோமர் பாரிசீ என அழைத்தனர். எனினும் நகரத்தின் பெயரைச் சதுப்பு நிலம் எனப் பொருள்படும் லுட்டேசியா என்றே குறிப்பிட்டனர். சுமார் 30 வருடங்களுக்குப்பின், நகரம் லத்தீன் பகுதி என வழங்கும் சீன் நதியின் இடது கரைக்கு விரிவடைந்தது. இது பின்னர் பாரிஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பாரிசின் மொத்தப் பரப்பளவு 305392 சதுர மீட்டர்கள் 41 சதுர மைல்கள்.
1852லிருந்து பழைய கட்டடங்கள் உடைக்கப்பட்டன. சாலைகள் அகலமாகின. தெரு விளக்குகளை முதல்முதலில் அறிமுகப்படுத்தியதால் பாரிஸ் விளக்கு நகரம் என்று உலகம் முழுவதும் புகழப்படுகிறது. 4000 ஆண்டுகளாக மக்கள் விரும்பி வாழும் நகரம். இன்றும் உலகின் முதன்மையான, வணிக மய்யமாக விளங்குகிறது.பாரிசு நகர மக்கள் பாரிசியன்கள் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்கள். தட்ப வெப்ப நிலை சீரானது. அதிகக் குளிர் அதிக வெப்பம் எனப் பாரிஸ் ஒருபோதும் தவிப்பதில்லை.
ஈஃபில் கோபுரம்
ஈஃபில் கோபுரம்
உலகத்தின் மிக உயர்ந்த கோபுரம் என்ற புகழுடன் விளங்கிய ஈஃபில் கோபுரம் தன் உச்சியை மேகங்களிடையே புதைத்து முந்நூறு மீட்டர் உயரத்தில் தலைநிமிர்ந்து நிற்கிறது.
1889ஆம் ஆண்டு பாரிசில் நடந்த அகில உலகக் கண்காட்சியின் ஒரு பகுதியாகத் தற்காலிகமாகக் கட்டப்பட்ட இந்தக் கோபுரம் மக்கள் விரும்பியதால் இடிக்கப்படாமல் நி-ன்றுவிட்டதோடு, இன்று பாரிஸ் நகருக்கு மட்டுமல்லாது அய்ரோப்பா கண்டத்துக்கே அடையாளமாயிற்று.
இதைக் கட்டியவர் பெயர் கண் டொவ் ஈஃபில் என்ற புகழ்மிக்கப் பொறியாளர். இதைக் கட்டி முடிக்கப் பன்னிரண்டாயிரம் இரும்புத் துண்டுகளும் எழுபது இலட்சம் ஆணிகளும், இரண்டு ஆண்டுகளும் தேவைப்பட்டிருக்கிறது.
லுவர் அருங்காட்சியகம் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்று. பாரிசில் காணவேண்டிய இடங்களில் முதன்மையானது. பிரெஞ்சு, இத்தாலி ஆகிய பாணியில் கட்டப்பட்ட இது கட்டிடக்கலைக்கு ஓர் எடுத்துக்காட்டு. அருங்காட்சியத்தில் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட கலைப்பொருட்கள் உள்ளன. மோனோலிசா என்னும் லியார்னாடோ டாவின்சியின் உலகப் புகழ் பெற்ற ஓவியம் இங்குதான் இருக்கிறது.
பாரிஸ் நகரத்தின் நடுவில் தீவு ஒன்றில் உலகப் புகழ்பெற்ற நாட்ரேடேம் தேவாலயம் அமைந்துள்ளது.ரோமானியர் இதே இடத்தில் தங்களின் கடவுளான ஜூபிடருக்குத் தேவாலயம் அமைத்து வழிபட்டனர். இதைக் கட்டிமுடிக்கச் சுமார் 200 ஆண்டுகள் ஆயிற்று. 130 அடி நீளமுள்ள இதற்கு 69 அடி உயரத்தில் இரண்டு கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. பிரமிக்க வைக்கும் கண்ணாடி ஜன்னல்கள் கொள்ளை அழகு.
பாம்பிடு மையம்
பாம்பிடு மையம்
பாம்பிடு மையம் கண்ணாடியாலும் உலோகங்களாலும் கட்டப்பட்ட கட்டடம் இது. இக்காலக் கலைப்பொருட்களின் தனி அருங்காட்சியகம் இது. பிரெஞ்சு அதிபர் ஜார்ஜ் பாம்பிடு இதனைக் கட்டியதால் அவர் பெயரால் விளங்கும் இதில் பிக்காசோ முதலிய புகழ்பெற்ற பல கலைஞர்களின் நாற்பத்தையாயிரத்துக்கும் மேற்பட்ட கலைப்படைப்புகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் 25000 பேர் வருகை புரியும் கலைக்கூடம் இது.
அழகான சாலை
அழகான சாலை
உலகின் மிக அழகான சாலை எனப் பெயர் பெற்ற 17ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்தச் சாலையில்தான் பிரெஞ்சு நாட்டின் தலைவரின் பெடிட் அரண்மனை உள்ளது.புத்தாண்டையோ, விளையாட்டுக் கொண்டாட்டங்கள் ஆகிய மாபெரும் நிகழ்ச்சிகள் அரங்கேறுவது இச்சாலையில்தான். இது இரண்டாம் உலகப் பெரும்போர் வெற்றிக் கொண்டாட்டத்தைக் கண்ட சாலையும் இதுவேயாகும்.
வெற்றி வளைவு
நெப்போலியன் வெற்றி வளைவு
பிரான்சு நாடு எனில் நினைவுக்கு வரும் மாவீரன் நெப்போலியன் என்றென்றும் பாரிஸ் நகர மக்களின் வீரத்தின் அடையாளம் 1806ஆம் ஆண்டில்தான் பெற்று வந்த வெற்றிகளின் நினைவாக அவன் கட்டிய வளைவுதான் வெற்றி வளைவு. ஆனால் இதனைக் கட்டி முடிக்கையில் நெப்போலியன் உயிருடன் இல்லை. இந்த வெற்றி வளைவில் நெப்போலியன் மேற்கொண்ட போர்கள், அடைந்த வெற்றிகள், அதற்கு உறுதுணையாக விளங்கிய தளபதிகளின் பெயர்கள் ஆகியன இடம் பெற்றுள்ளன. இந்த வெற்றி வளைவின் 234 படிகள் ஏறி வளைவின் உச்சியை அடைந்தால் பாரிஸ் நகரினையும் அதன் பிற சின்னங்களையும் மேலிருந்து காணலாம்.
பூங்கா நகரம் – லக்சம்பர்க் பூங்கா
நாட்ரேடேம் தேவாலயம்
பாரிஸ் ஒரு பூங்கா நகரமும் ஆகும். அங்குள்ள பூங்காக்களில் மிகப்பெரியது லக்சம்பார்க் பூங்கா. இரண்டு இலட்சத்து இருபத்து நான்காயிரத்து அய்நூறு சதுர மீட்டர் பரப்பளவு உடையது. இது 1612ல் அமைக்கப்பட்டது. பூங்காவின் மத்தியில் பெரிய குளம், குளத்தைச் சுற்றிப் புல்வெளிகள், அழகிய சிலைகள், இரண்டு அழகிய நீர்த்தாரைகள் என்று பூங்காவிற்கே இலக்கணம் வகுக்கின்றன.
கல்லரைக் காடுகள்
லுவர் அருங்காட்சியகம்
பல்லாயிரக்கணக்கான ஆண்டு வரலாறு படைத்த நகரம் பாரிஸ் ஆதலால் புகழ்பெற்ற மானிடர் பலரின் கல்லறைகள் உள்ளன. சுற்றுலாப் பயணிகள் கல்லறையைச் சுற்றிப் பார்க்கச் செல்லும் அதிசயம் இங்கேதான் தொடங்குகிறது. அவ்வாறு செல்லும் லக்சைஸ் கல்லறை எனும் கல்லறை 109 ஏக்கர் பரப்பளவு கொண்டது. புகழ்பெற்ற கலைஞர்கள், அறிஞர்கள் மீளாத் துயில் கொண்டுள்ளனர். இங்கே அழகிய கற்சிலைகளையும் காண்கிறோம்.
கலை, கலைஞர்களின் இருப்பிடம்
மோனோலிசா
கலைகளின் இருப்பிடமான பாரிசில் புகழ்மிக்க பழைய நினைவுச் சின்னங்கள் அருங்காட்சியங்கள், பசுமை மிக்க பூங்காக்கள் பழமை மாறாமல் பாரிசுக்கு வா என்று சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இந்தப் பாரிசை இரண்டாம் உலகப் பெரும்போரின்போது தீக்கிரையாக்க ஜெர்மனியிலிருந்து இட்லர் தொலைபேசி வழியாக ஆணையிட அவனுடைய தளபதி இரவில் மாடத்தில் இருந்து பார்த்துக் கொளுத்த மனமில்லாமல் விட்டு விடுகிறான். தொலைபேசியிலிருந்து இட்லர் கேட்ட ஆங்கில வசனம் மி றிணீக்ஷீவீ ஙிக்ஷீஸீவீஸீரீ? அதன் விளைவு இன்றும் ஆண்டுக்கு மூன்று கோடிப்பேர் அதன் அழகைக் கண்டு வியக்கும் அற்புத நகராய் உள்ளது.
டிஸ்னிலாண்ட் பாரிசில் புறநகர்ப் பகுதியிலுள்ளது. பாரிசின் வடகிழக்கிலுள்ள வெர்சாய் நகரில் அமைந்துள்ள பதினான்கு, பதினைந்து, பதினாராம் லூயி முதலான அரசர்களின் அரச மாளிகைகள் பிரான்சின் அதிகச் சுற்றுலாக் கவர்ச்சியுள்ள இடம், மெலுனுக்கு அருகிலுள்ள சிறிய அரச மாளிகையைப் பின்பற்றியே வெர்சாயி மாளிகைகளை வடிவமைத்தனர். செயின் டெனிஸ் பசிலிக்கா, பண்டைய கோரி தேவாலயம், பல பேரரசர்களின் கல்லறைகள் நகரின் வடக்கிலுள்ளன.