பெரியார் பெற்றிருந்த வனப்புகள்
பொருள் புலப்பட, பொருள் தோன்றக் கூறுதலை புலன் வனப்பு என்பர். இந்த அரிய புலன் வனப்பு தந்தை பெரியார் அவர்களின் எழுத்திலும் பேச்சிலும் காணப்படும்.
எவரையும் வசியப்படுத்தும் தோற்றப்பொலிவின் வெண்தாடி நகைமுக வனப்பு.
தோட்கப்படாத செவியைத் துளைத்து வளைத்துப் போடும் நாவின் வனப்பு.
வெற்றுரை கேளாக் காதின் வனப்பு.
ஏறிட்டுப் பார்த்தவுடன் கணித்துவிடும் கண்களின் வனப்பு.
விடியலுக்கு முன் எழுதிக் குவிக்கும் கரத்தின் வனப்பு.
அரிய வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூரும் நனவிலி மனப்பதிவின் வனப்பு.
ஓய்வறியாப் பணியின் வனப்பு.
எளியோருக்கும் வலியோருக்கும் காட்டும் பணிவின் வனப்பு.
உள நெகிழ்விலும் மகிழ்விலும் தளர்வறியா மனத்தின் வனப்பு.
ஒட்டி உறவாடி பின் வெட்டிப் பகைத்த நண்பர்களிடம் காட்டிய நட்பின் வனப்பு.
பாதிப்படைந்தவர்களிடம் காட்டிய பரிவின் வனப்பு.
வரலாறு படைத்த சிக்கனத்தின் வனப்பு.
பழிப்புரை தாங்கா பண்பின் வனப்பு.
புகழுரை தாங்கா நாணத்தின் வனப்பு.
ஆரியப் பகைக்கஞ்சா துணிவின் வனப்பு.
ஒரு கருத்துக்கு வடிவம் கொடுக்கும் சிந்தனையின் வனப்பு.
எங்கும் எதிலும் எப்பொழுதும் பகுத்தறிவின் வனப்பு. ஆகிய இந்த வனப்புகளை எல்லாம் ஒருங்கே பெற்றவர்தான் தந்தை பெரியார். பெரியார் எனும் சொல் இணைப்பரும்* பெருமையைக் குறிக்கும். * ஒப்புச் சொல்வதற்கு அரிய பெருமையை உடையவர்.
– சு.ஒளிச்செங்கோ