சும்மா ‘மொக்க’ போடாதீங்க!
– ஹூவாமை
மின்னுவதெல்லாம் பொன்னல்ல -_ என்ற பழமொழியை நீங்களும் கேட்டிருப்பீர்கள்? இந்தப் பழமொழியைக் கேட்டவுடன் எனக்கு இரவு நேரத்தில், விண்ணிலிருந்து நம்மைப் பார்த்துக் கண் சிமிட்டும் விண்மீன்கள்தான் நினைவுக்கு வருகின்றன.
எப்படி என்கிறீர்களா?
முதலில், உங்களில் எத்தனை பேர், இரவில் வானத்தில் உலவும் விண்மீன்களைக் கண்டு ரசித்திருக்கிறீர்கள். அப்படி ரசித்திருக்கிறீர்கள் என்றால், கீழே இருக்கும் பதில், உங்களின் ரசனையை மேலும் பட்டை தீட்டக்கூடும்.
இதற்கு, நாம் பதில் சொல்லும் முன்பு அறிவியல் என்ன சொல்கிறது? விண்மீன்கள் மின்னுவதில்லை என்பதுதான் அறிவியலின் பதில். அப்படி என்றால், ஏன் அவை அப்படித் தெரிகின்றன?
நாம் வசிக்கும் இந்த பூமியிருக்கிறதே _ இதன் குடும்பம் _ சூரியக் குடும்பம். இதற்கும் அப்பால் உள்ள விண்மீன்களைத் தொலைநோக்கியில் பார்த்தால், அவை குண்டூசி முனை அளவுதான் தெரியும். அவ்வளவு தூ…ரத்தில் இருக்கிறது. அதனால், ஒளி விலகல் ஏற்பட்டு மின்னுவது போலத் தெரிகிறது. அருகில் இருக்கின்ற வெள்ளி, வியாழன், பூமியின் துணைக் கிரகமான நிலா போன்றவை மின்னாது.
எளிமையாகச் சொல்வதென்றால்… பூமியில், இரவு நேரத்தில் வாகனத்தின் முகப்பு விளக்கிலிருந்து வரும் ஒளி மின்னும். ஆனால், அதே வாகனம் அருகில் வந்தால் மின்னாது. அதேபோலத்தான் விண்மீன்களும்.