தெரியுமா?
உலகப் புத்தக நாள் : ஏப்ரல் 23
தெரியுமா?
உலகின் மிகப் பெரிய புத்தகம் மியான்மர் நாட்டில் உள்ள குதோடவ் பகோடாவில் (Kuthodaw Pagoda) உள்ளது. 729 சலவைக் (Marble)கற்களால் அமைந்த இதில் ஒரு பக்கத்திற்கு 80லிருந்து 100 வரிகள் வரை காணப்படுகின்றன.
தூய்மையான தங்க மையினால் இரு பக்கங்களிலும் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு சலவைக் கல்லும் 3.5 அடி அகலத்தினையும், 5 அடி உயரத்தினையும் 5 அங்குல தடிமனையும் கொண்டுள்ளது.
உலகின் முதல் அச்சு நூலாக ஜோகன்ஸ் கூட்டன்பெர்க் (Johannes Gutenberg) வெளியிட்ட பைபிள் கருதப்படுகிறது. இது வாஷிங்டன் டி.சி.யில் உள்ள லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் நூலகத்தில் உள்ளது.
உலகின் மிகச் சிறிய புத்தகமாக Teeny Ted From Turnip Town என்னும் நூல் கருதப்படுகிறது. தூய்மையான கிரிஸ்டலைன் சிலிகான் கொண்டு அச்சிடப்பட்டுள்ளது. இதனை மல்கோம் டக்ளஸ் (Malcolm Douglas) என்பவர் எழுதியுள்ளார். Electron Microscope உதவியுடன் மட்டுமே இந்தப் புத்தகத்தைப் படிக்க முடியும்.¨
இது ரோம் நாட்டில் வசித்த (கி.பி. 100-178) புவியியல் மற்றும் வானியல் (Astronomer) அறிஞர் டாலமியால் உருவாக்கப்பட்ட உலக வரைபடம் (Atlas) ஆகும். உலகின் முதன்முதலில் அச்சில் வெளிவந்த உலக வரைபடம் என்ற பெருமையினைப் பெற்றுள்ளது. 1482ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட இதன் காப்புரிமையினை பிரிட்டிஷ் நூலகம் பெற்றுள்ளது.
உலகின் பெரிய அச்சுப் புத்தகமாக ‘This is Muhammad’ கருதப்படுகிறது. இது 16.40 அடி, 26.44 அடி நீள அகலத்தையும் சுமார் 1500 கிலோ எடையினையும் 429 பக்கங்களையும் உடையது. 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று துபாயில் உள்ள (Mashahed International Group) குழுமத்தால் வெளியிடப்பட்டது.
மார்க் டுவைன் எழுதிய ‘Adventures of Tom Sawyer’ என்ற நாவல் தட்டச்சு (Typewriter) செய்யப்பட்ட முதல் நாவல் என்று கருதப்படுகிறது.