நடுவுல கொஞ்சம் சிலையைக் காணோம்
நடுவுல கொஞ்சம் சிலையைக் காணோம்
-சமா
இந்தப் படங்களைப் பார்க்கையில் யாரோ இந்தச் சிலைகளை உடைத்துவிட்டார்கள் என்றோ, அல்லது ஏதோ கணினி வரைகலை வேலை என்றோ நினைத்துவிடாதீர்கள். அழகான இந்தச் சிலைகள் உண்மையாகவே இப்படித்தான் இருக்கின்றன.
நடுவில் சுரண்டப்பட்டது போல உருவாக்குவதையே ஒரு பாணியாகக் கொண்டு பிரான்சு நாட்டைச் சேர்ந்த புருனோ கேட்டலானோ (Bruno Catalano) என்ற சிற்பி உருவாக்கியவை தான் இந்தச் சிலைகள்.
பிரான்சு நாட்டின் மார்சிலி துறைமுகத்திற்கு ஒவ்வொரு நாளும் வருகைதரும் நூற்றுக் கணக்கான உழைப்பாளிகளை அடையாளப் படுத்தும் விதமாக அவர்களின் உருவத்தைத்தான் சிற்பமாக உருவாக்கியிருக்கிறார். அது சரி, எப்படி இந்தச் சிலைகளின் மேற்பகுதிகள் விழாமல் நிற்கின்றன.
வெண்கலத்தில் உருவாக்கப் பட்டுள்ள இந்தச் சிலைகளின் இடது கையில் வைத்துள்ள பெட்டியைக் கொண்டுதான் சமநிலை (Balance) செய்யப்பட்டுள்ளது. பிரான்சில் கலைநுட்பத்தோடு சுரண்டியே சிலைகளை உருவாக்கி யிருக்கிறார்கள். ஆனால், சுரண்டப்படும் உழைப்பாளிகளைச் சுட்டுவது போலவே எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு?