செய்து அசத்துவோம் – அழகிய பறவைகள் வீடு
வாசன்
தேவையான பொருள்கள்:
1. ஒரு நீள் வடிவ அட்டைப்பெட்டி,
2. செவ்வக வடிவத்தில் தங்களுக்குப் பிடித்தமான நிறத்திலான இரண்டு அட்டைகள்,
3. பசை,
4. வெட்டுக் கத்தி.
செய்முறை:
1. முதலில் நீள்வடிவ அட்டைப் பெட்டியை எடுத்து மேல் பக்கத்து நான்கு மூடிகளையும் நீக்கி விடவும்.
2. பிறகு படம் 3 இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை வெட்டுக்கத்தியால் வெட்டி எறிந்து விடவும்.
3. இப்பொழுது படம் 5 இல் காட்டியபடி கதவுக்கான கோட்டை வரைந்துகொள்ளவும்.
4. பின்பு படம் 6 இல் காட்டியபடி கதவுக்கான கோட்டில் கோடிட்ட இடங்களை மேல், கீழ் மற்றும் நடு ஆகிய மூன்றையும் வெட்டிக் கொள்ளவும்.
5. பின்பு படம் 7 இல் காட்டியபடி கதவுகளை திறந்துகொள்ளவும்.
6. பிறகு செவ்வக வடிவ அட்டையில் ஒன்றை எடுத்து, படம் 8இல் காட்டியபடி சரி பாதியாகப் பிரித்து, கூரைக்காக கூம்பு வடிவத்தில் மடக்கிக் கொள்ளவும்.
7. அதை எடுத்து, பசை கொண்டு தடவி வீட்டின் மேல்புறத்தில் ஒட்டிக்கொள்ளவும்.
8. மீண்டும் மற்றொரு செவ்வக அட்டையை எடுத்து படம் 10இல் காட்டியுள்ளதைப் போல கோடிட்ட இடத்தை மேல்புறமாக சிறிது மடித்து விட்டுக் கொள்ளவும்.
9. கடைசியாக அந்த அட்டையின் மீது வீட்டை எடுத்து வைத்து பசை கொண்டு ஒட்டவும்.
இப்பொழுது உங்களுக்கு ஓர் அருமையான பறவை வீடு கிடைத்துவிடும். அதை கயிற்றில் கட்டி தொங்க விடவும்.
சிறிய கிண்ணங்களில் பறவைக்கான தானியங்களை வைத்து அந்த வீட்டினுள் வைத்தால் பறவைகள் விரும்பி வந்து உண்ணும். பார்த்து மகிழலாமே!