குறுக்கெழுத்துப் போட்டி
மேலிருந்து கீழ்:
1. “ ________ டிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே’’ என்றார் பாவேந்தர்.(4)
2. “ ________ நாகாக்க’’ _ குறள்.(7)
3. “ _______ எல்லாம் உடையார்’’ என்றார் வள்ளுவர்.(6)
5. “வரவு எட்டு ____ செலவு பத்து ____” என்றால் வாழ்க்கை இனிக்காது _ கீழிருந்து மேலாக.(3)
8. பெண் _ வேறு சொல்.(3)
9. யாரையும் குறைவாக மதிப்பிட்டு ___ செய்யக் கூடாது.(5)
10. “அறம், ____, இன்பம்” என தமிழர் வாழ்வைப் பாடினார் திருவள்ளுவர்.(3)
13. “நீரின்றி அமையாது உலகு” அதற்கு இது பொழிய வேண்டும்.(2)
15. “ ____ப் பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது”(2)
16. கால்பந்தில் வீரர்கள் போராடுவது இதைப் போடுவதற்குத்தான்.(2)
இடமிருந்து வலம்:
1. “ஈரோட்டிலே பிறந்து இன்பத் தமிழகத்தில் அறிவுத் தேரோட்டி வந்தவர்’’ பிறந்த நாள் செப். 17 (4)
3. செப். 15இல் பிறந்து தமிழகத்திற்கு “தமிழ்நாடு’’ என்று பெயர் சூட்டிய தந்தை பெரியாரின் தலைமகன்…? (3)
4. ஆகாயம் _ வேறு சொல்.(2)
6. மீன்பிடிக்க மீனவர்கள் வீசுவார்கள்.(2)
7. மாவீரர்கள் “ ____ க்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள்’’(2)
9. பக்தர்கள் “சாப்பிடாத கல் சாமிக்கு படைப்பார்கள் ___”(4)
10. “ ___லே பிறந்து ___லே வளர்ந்த புலவர் பெருமானே’’ ஒரு திரைப்பாடல்.(3)
11. சவூதி அரேபியாவின் நாணயம்.(3)
12. “ ____ மேகம்’’ சூழ்ந்தால் மழை கொட்டும்(2)
14. “மனிதர்கள் அனைவரும் ___ “ என்றார் பெரியார் _ (வலமிருந்து இடமாக)(3)
16. வீரன் _ எதிர்ச்சொல்.(2)
17. “____ பரவட்டும்’’ என்றார் பேரறிஞர் அண்ணா.(1)
18. நாசிக்குள் தூசு நுழைந்தால் இது உண்டாகும்.(4)
– பெரியார் குமார்
விடைகளை எழுதி அனுப்புங்கள் பரிசுகளை வெல்லுங்கள்.