தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்
கே.பாண்டுரங்கன்
VOICE
[வினை வகை]
பெரியார் பிஞ்சுகளே, சென்ற இதழ் கட்டுரையை சுருக்கமாக வி(வ)ரிக்கலாமா?
Active (Action)என்றால் தமிழில் “செயல்”
Passive (Non-Action) என்றால் தமிழில் “செயல்படாமை’’
Active Voiceஇல் இருந்து Passive Voiceக்கு எப்படி மாற்றுவது?
அதாவது செய்வினையிலிருந்து… செயப்பாட்டு வினைக்கு செல்வது எப்படி?
(ஏன் மாற்ற வேண்டும்… எல்லாவிதமுமாய் ஆங்கிலம் பேசுவதற்குத்தான்)-
இதோ ஓர் அட்டவணை, நீங்கள் புரிந்துகொள்ள…
* உங்கள் நினைவுக்கு!!
[P.P.] Past Participle என்றால் இறந்த கால வினையெச்சம்; அதாவது, go/went/gone என்பதில் மூன்றாவதாக உள்ள gone என்று படித்தோமல்லவா? அதுதான் P.P.
* அதேபோல், ‘Be’ form verbகள் என்றால்…
Be, am, is, are, was, were என்பனவாகும்.
குறிப்பு: மூன்று காலங்களின் (Present, Past, Future) perfect continuous-க்கும், Future continuous tense-க்கும் Passive Voice கிடையாது.
(தொடரும்)