குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்து வலம்:
1. நூற்றாண்டு காணும் நம் அன்னை (7)
3. “___’’ பரவட்டும் என்றார் பேரறிஞர் அண்ணா (1)
4. குற்றம் செய்தால் ______ கிடைக்கும். (4)
6. “தொட்டனைத்தூறும் மணற் ______” குறள் (2)
8. தோழர் _ மலையாளத்தில் “______வு’’ (2)
9. துணிகள் சலவை செய்யும் கடை (ஆங்கிலத்தில் நாம் சொல்லும் வழக்குச் சொல்) (4)
12. கேலி _ வேறு சொல் _ திரும்பியுள்ளது. (4)
14. திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கிறது தந்தை பெரியாரின் மிகப் பெரிய ______ (2)
15. “இராமாயணம் ஓர் ______ திராவிடப் போராட்டம்’’ என்றார் ஜவகர்லால் நேரு. (3)
16. ரஷ்யா ஒருங்கிணைந்திருந்தபோது மக்களால் இவ்வாறும் அழைக்கப்பட்டது. (8)
மேலிருந்து கீழ்
1. “கடவுளை மற ____” என்றார் தந்தை பெரியார். (6)
2. ஒரு கருமை நிறப் பறவை. (2)
5. வசனம் அல்லது உரையாடல் _ ஆங்கிலத்தில். (4)
6. 1993இல் மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்திய அன்றைய மத்திய சமூகநலத்துறை அமைச்சர் சீதாராம் ______ (3)
7. “______ நிலம் வேண்டும்’’ என்றார் பாரதி _ கீழிருந்து மேலாக. (2)
10. “தென்றல் வந்து தீண்டும்போது என்ன
______ணமோ மனசிலே’’ ஒரு திரைப்படப் பாடல். (2)
11. “______ பட்டி’’ தவில் கலைஞர் சுப்பிரமணியம் பிறந்த ஊராகும். (3)
13. “கேடில் விழுச்செல்வம் ______” _குறள். (3)
14. லெபனான், இஸ்ரேல், ஈரான், துருக்கி ஆகியவற்றுக்கு மத்தியில் அமைந்துள்ள நாடு ______ அரபுக் குடியரசு (3)
15. தமிழ் மாதங்களில் ஒன்று (2)
கீழிருந்து மேல்
16. Experiment என்பதற்கு தமிழ்ச் சொல். (3)
– பெரியார்குமார், இராசபாளையம்
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை மார்ச் 15ஆம் தேதிக்குள்
பெரியார் பிஞ்சு முகவரிக்கு அனுப்புங்கள். பரிசுகளை வெல்லுங்கள்!