உயிர்மை!

அழுக்குத் தேய்த்துக் குளித்திடு!
ஆடை துவைத்து உடுத்திடு!
இழுக்கு நீக்கி வாழ்ந்திடு!
ஈகைப் பண்பு கொண்டிடு!
உண்மை நிலையில் நின்றிடு!
ஊரார் மெச்ச ஒழுகிடு!
எண்ணிக் கருமம் துணிந்திடு!
ஏற்று அதனை முடித்திடு!
அய்யம் அச்சம் அகற்றிடு!
ஒழுக்கத் தோடு இணைந்திடு!
ஓங்கக் குறளைக் கற்றிடு,
அவ் வண்ணமே வாழ்ந்திடு!
– ச.ஆ.கேசவன், கோவில்பட்டி