இசைப்போம் வாரீர்! – ஈரோட்டுச் சிங்கமடா..
பல்லவி
ஈரோட்டுச் சிங்கமடா எங்கள் குலத் தங்கமடா _ அறிவுத்
/ சாநீத / பத ததத / சாச நிச / மாமம ம / மம ம /
தேரோட்டும் தலைவனடா திராவிடத் தந்தையடா
/ மாபாத / பததத த / நீசச நீசச சாநீ /
திராவிடத் தந்தையடா
/ சாரிக சாரிநிச /-(2)
சரணம் 1 RHYTHM CHANGE 6/8
புரட்சிக் குயிலைப் பாடவைத்த தென்னவன்
/சசச ரிககக / காக கக /ரீரிகா..ச /
ஞானப் புத்தகமாய் மின்னுகின்ற பொன்னவன்
/சாச / சாசரிச / சாசரீக / சாச சா../ -(2)
புரட்டுக்கதை வேதங்களை வெறுத்தவன்
/தாசரிமம / மாம மம / கபமரீக / -(2)
தீய புல்லர்களின் ஆணவத்தை அறுத்தவன்
/சாச / சாரி சரி / சாச ரிக /சாச ச/
பல்லவி
சரணம் 2 RHYTHM CHANGE 6/8; SCALE CHANGE D minor
கடவுள் இல்லை ஜாதி இல்லை
/ரிகக கக / ரிகக கக /
கடவுள் இல்லை ஜாதி இல்லை என்றவன்
/ரிகக கக / ரிகக கக / ரிபமசா./
உயர் கழகத்தாலே தீமையினை வென்றவன்
/சரி /நீநி நீநி / சாசரிக / சாச ச…./ -(2)
மடமைதனை மாய்துயர்ந்த மன்னவன்
/தாசரிமம / மாம மம / கபமரீக/ -(2)
தமிழ் மக்கள் உயிர் காத்து வந்த பண்ணவன்
/சரி /சாரி சரி /சாச ரிக / சாச ச…/
சரணம் 3 RHYTHM CHANGE 6/8
சித்தன் போல அறிவுரைகள் தந்தவன்
/சசச ரிககக / காக கக /ரீரிகா..ச /
தூய சிந்தனையே வடிவமாகி வந்தவன்
/சாச / சாசரிச / சாசரீக / சாச சா../ -(2)
இத்தரையில் இவருக்கிணை யாரடா
/தாசரிமம / மாம மம / கபமரீக/ -(2)
தமிழர்க்கு இவரே என்றும் தந்தை என்று கூறடா
/ சசசச / சாரி சரி / சாச ரிக /சாச ச/ -(2)
பல்லவி..
இப் பாடலைக் கேட்க
Scale: D 2/4
பாடல்: கவிஞர் ஆற்றலரசு
இசை: டி.ஆர். பாப்பா