அமெரிக்காவில் அய்யாவிழா!
பெரியார் – அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பாக கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி தந்தை பெரியார் 142 -ஆம் பிறந்தநாள் காணொலி வாயிலாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்கான கட்டுரை எழுதும் போட்டியும், ‘கார்ட்டூன்’ (கோட்டுரு) வரைதல் போட்டியும் நடத்தப் பட்டது. இதில் மிச்சிகனில் வசிக்கும் தமிழ்க் குழந்தைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு மிச்சிகன் வாழ் தமிழர் சார்பாக பரிசுத்தொகை வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, “பெரியார் கொள்கைகளை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பதில் இருக்கும் சிக்கல் என்ன?’’ என்கிற தலைப்பை ஒட்டி ஒரு குழு விவாதம் நடைபெற்றது. அதற்கு மிச்சிகன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராம் மகாலிங்கம் தலைமை தாங்கினார். அதில் மிச்சிகனைச் சார்ந்த சுத்தமல்லி கங்கா, பிரியா, பிரபாகரன், சுரேஷ் மற்றும் சியாட்டிலில் வசிக்கும் தோழர் அருள் போன்றோர் கலந்து கொண்டு அவர்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் அறை கூவல்கள் பற்றி விளக்கிக் கூறினர். இதில் சிறப்பு பங்கேற்பாளராக பெரியார் பன்னாட்டு மய்ய ஒருங்கிணைப்பாளர் சோம. இளங்கோவன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.