தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் : DEGREES OF COMPARISION (ஒப்பீட்டு நிலைகள்) பகுதி – 20
கே.பாண்டுரங்கன்
வழிமுறை [Formula] 1:
as அல்லது so + Adjective as
வழிமுறை [Formula] 2:
Adjective + “er” + …than/ அல்லது
More+ Adjective+…than]
வழிமுறை [Formula] 3:
The + ‘est’ of Adjective/ அல்லது The + Most + Adjective
(Degrees of Comparison) ஒப்பீட்டு நிலைகளின் பிரிவுகளைப் பார்த்தவுடன் உங்களுக்குத் தெரிவது என்ன?
மேலேயுள்ள விண்மீன்களைப் (பொருள்களைப்) பாருங்கள்.
Positive Degree:
இரண்டு பச்சை விண்மீன்கள் (இரு பொருள்களும்) அளவில் சமமாக உள்ளன. இதனை சமநிலைப் பண்பு (Positive Degree) என்போம். Positive என்றாலே நேர்மறை அல்லவா? இங்கே இரண்டு விண்மீன்களும் ஒரே அளவில் உள்ளன. அதாவது ஒன்றைப் போல மற்றொன்று உள்ளது. ஆங்கிலத்தில் இதை ணீs அல்லது so + Adjective + as என்ற (formula) வழிமுறை மூலம் எழுதலாம்.
“First Green Star is as small as Second Green Star”
முதல் பச்சை விண்மீன் இரண்டாவது பச்சை விண்மீன் போலவே சிறியதாக உள்ளது.
இங்கே small தான் adjective. அதை வழிமுறைப்படி எழுதிப் பாருங்கள்.
Comparative Degree
இரண்டாவது ஆரஞ்சு விண்மீன் முதல் ஆரஞ்சு விண்மீனைவிட அளவில் சிறியது அல்லது இரண்டு ஆரஞ்சு விண்மீன்களும் ஒன்றுக்கொன்று வேறுபட்டுள்ளன. இதனை (இரு பொருள்களும்) ஒன்றுக்கொன்று வேறுபட்ட நிலைப்பண்பு (Comparative Degree) என்போம். ஆங்கிலத்தில் இதை “er” + Adjective + …than/அல்லது More+Adjective + …than] என்ற வழிமுறை (formula) மூலம் எழுதலாம்.
“First Orange Star is bigger than Second Orange Star”
முதல் ஆரஞ்சு விண்மீன் இரண்டாவது ஆரஞ்சு விண்மீனை விட பெரியதாக உள்ளது.
Superlative Degree:
இங்குள்ள மூன்றாவது நீல விண்மீன் மற்ற எல்லா நீல விண்மீன்களைக் காட்டிலும் (அனைத்திலும்) பெரியது. இதனை உச்சநிலைப் பண்பு அல்லது உன்னத நிலைப்பண்பு (Superlative Degree) என்போம். ஆங்கிலத்தில் இதை The + “est” of Adjective அல்லது The +Most + Adjective என்ற வழிமுறை (formula) மூலம் எழுதலாம்.
“Third Blue Star is the biggest One.’’
இப்படியும் எழுதலாம்…
“First Blue Star is the smallest One.”
முதலாம் நீல விண்மீன் மிகச் சிறியதாக உள்ளது.
இனி… மூன்று நிலைகளுக்கும் 3*3=9 என மொத்தம் ஒன்பது எடுத்துக்காட்டுகள் மட்டும் பார்ப்போம். புரிந்துகொண்டு விடுதலை அடைந்த பறவைபோலப் பறப்போம்.
எ.கா:1
Butter Milk is as ‘white’ as Milk .
மோர் பாலைப் போன்றே வெண்மையானது.
எ.கா:2
Darjeeling is ‘cooler’ than Ooty.
டார்ஜிலிங் ஊட்டியை விடக் குளிரானது.
எ.கா:3
Giraffee is the tallest animal in the world.
ஒட்டகச் சிவிங்கி தான் உலகிலேயே (அந்த) மிகவும் உயரமான விலங்கு.
எ.கா:4
Fight for the right is better than Quiet.
நியாயத்திற்காகப் போராடுவது என்பது அமைதியாக சும்மா இருப்பதைவிட சிறந்ததாகும்.
எ.கா:5
Mathi is as Simple as his brother
மதிஅவருடைய தம்பியைப் போல் எளிமையானவர்.
எ.கா:6
I bought a pen which is the Cheapest in the Shop.
கடையிலேயே மிக மிக விலைக்குறைவான பேனாவை நான் வாங்கினேன்.
எ.கா:7
The Students are so brilliant as the Teacher.
மாணவர்கள் ஆசிரியரைப் போலவே புத்திசாலிகள்.
எ.கா:8
Tea is better than Coffe.
காபியை விட தேநீர் சிறந்தது.
எ.கா:9
mukil is the best writer in the Cless.
வகுப்பறையிலேயே முகில் சிறந்த எழுத்தாளன்.
தொடரும்…