ஊரும் பேரும்
பண்ருட்டி பலாப் பழத்தை
பார்க்க நினைக்க ருசிக்குது!
திருநெல்வேலி அல்வாவைத் தான்
தேடிக் கண்கள் அலையுது!
மணப்பாறை முறுக்கு சுவை
மனசில் எப்பவும் இருக்குது
சேலத்து மாம்பழந்தான்
சப்புக் கொட்ட வைக்குது!
நெல்லிக்குப்பம் சர்க்கரையோ
நினைத்தாலே இனிக்குது!
கோவில்பட்டி கடலை மிட்டாய்
கடிக்க எச்சில் ஊறுது!
இராசிபுரம் நெய் வாசம்
இராகம் பாடத் தோணுது!
சிறிவில்லிபுத்தூர் பால்கோவா
சுவைக்க வாசம் தெரியுது!
மார்த்தாண்டம் தேன் தித்திப்பு
மனதில் ஏக்கம் பிறக்குது!
பொள்ளாச்சி இளநீரில்
புத்து ணர்ச்சி துள்ளுது!
சிறுத்த சிறுமலை வாழைப்பழம்
சிந்தையிலே நிற்குது!
ஊரும் பேரும் சுவையான
ஓகோவென்றே கலக்குது!
– “சோழா”புகழேந்தி