இசைப்போம் வாரீர்! – தமிழனே இது கேளாய்
இசைக் குறிப்பு: விஜய் பிரபு
Scale : D minor, 4/4
இராகம்: சிந்துபைரவி
பாடல்: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
இசை & குரல்: புஷ்பவனம் குப்புசாமி
தமிழனே இது கேளாய் _ உன்பால்
/பதநிச / சக ரீச / பப /
சாற்ற நினைத்தேன் பல நாளாய்!
/பநிதப / கக கமப / கமரீகாச / _ 2
சரணம் -1
கமழும்உன் தமிழினை உயிரென ஓம்பு
/ கக கரி / கககக / ரிகரிச காக /
காணும் பிற மொழிகளோ வெறும் வேம்பு!
/ சாச / நிச நிசச சசரீ / சம ரீச / __ –2
நமையெலாம் வடமொழி தூக்கிடும் தாம்பு
/ரிரி ரிரி / சரி ரிரி / சரிசநி சாரீ…/–___—-2
நம் உரி மைதனைக் கடித்ததப் பாம்பு!
/நிச / சச சச சரி / நிச சக / ரீசாச ../ —2
தமிழனே இது கேளாய் _ உன்பால்
/பதநிச / சக ரீச / பப /
சாற்ற நினைத்தேன் பல நாளாய்!
/பநிதப / கக கமப / கமரீகாச /
தமிழனே இது கேளாய்
சரணம் -2
தனித்தியங்கும் தன்மை தமிழினுக் குண்டு;
/ கக கரி க / காக / ரிகரிச காக /
தமிழே ஞாலத்தில் தாய்மொழி பண்டு
/ சாச / நிசசரீ / நிசக / ரீச /____–2
கனிச்சாறு போற்பல நூலெலாம் கண்டு
/ரிரி ரீரி / சரி ரீரி / சரிசநி / சாரீ…/___—-2
காத்ததும் அளித்ததும் தமிழ்செய்த தொண்டு.
/நிச சச / சச சரி / நிச சக / ரீசாச ../___—2
தமிழனே இது கேளாய் _ உன்பால்
/பதநிச / சக ரீச / பப /
சாற்ற நினைத்தேன் பல நாளாய்!
/பநிதப / கக கமப / கமரீகாச /
தமிழனே இது கேளாய்
சரணம் -3
வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார்
/ கா கரி / காகக / ரிகரிச / காக /
உயர்ந்தபின் தமிழையே பழித்தார் வாழ்வினில்
/ சசசச / நிசசரீ / நிசக / ரீச ச / ___–2
நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்
/ ரீரி ரி / சரி ரிரி / சரிசநி / சாரீ…/___—-2
நாமுணர்ந்தோம் இந்நாள் அவரஞ்சி விழித்தார்.
/நிச சச சா / சரி / நிச சக / ரீசாச ../___—2
தமிழனே இது கேளாய் _ உன்பால்
/பதநிச / சக ரீச / பப /
சாற்ற நினைத்தேன் பல நாளாய்!
/பநிதப / கக கமப / கமரீ…காச / _2
எப்படி வாசிப்பது என்பதை இனி
பெரியார் பிஞ்சு யூடியூப் சேனலின் வழியாக நீங்கள் பார்த்துக் கற்கலாம்.
https://qrgo.page.link/b2FMo