பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: மீண்டும் கொரோனா அதிகமாக பரவுகிறது எச்சரிக்கை!

வணக்கம் பிஞ்சுகளே,
வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது என்பதை செய்திகளின் வாயிலாக நீங்கள் கவனித்திருப்பீர்கள் அல்லவா? அதில் யாருக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லி, மக்களை விழிப்படையச் செய்ய வேண்டும் என்பதற்காக பிரச்சாரப் பயணத்தில் நான் இருப்பதால், இந்த இதழில் விரிவாக உங்களோடு பேச முடியவில்லை. எனவே, அடுத்த இதழில் பல தகவல்களோடு உங்களைச் சந்திக்கிறேன்.
மீண்டும் கொரோனா பரவுகிறது என்பதும், அதிலும் குறிப்பாக பள்ளிக் குழந்தைகள் மத்தியில் வேகமாகப் பரவுகிறது என்பதும் கவலை கொள்ளச் செய்யும் செய்திகளாகும். எனவே கையை அடிக்கடி சோப் போட்டுக் கழுவுதல், முகக் கவசம் தரித்தல், போதிய தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்தல், பொது இடங்களுக்குப் பயணிப்பதைக் குறைத்துக் கொள்ளுதல், உங்கள் உறவினர், நண்பர்கள் உடல்நலனில் முழுக் கவனம் செலுத்துதல் முக்கியம்! முக்கியம்!
உங்கள் பிரியமுள்ள
ஆசிரியர் தாத்தா,
கி.வீரமணி