நேர்க்கூற்றுக்கும்(Direct Speech) அயற்கூற்றுக்கும்(Indirect Speech
நேர்க்கூற்றுக்கும்(Direct Speech) அயற்கூற்றுக்கும்(Indirect Speech/Reported Speech) 4 வகை உரையாடல் சொற்றொடர்கள் (Sentences)தேவை. அதற்கு முன் இந்த நான்கு சொற்றொடர்கள் ஏன்? தெரிந்து கொள்வோமா?
நாம் அன்றாடம் நம்முடைய உரையாடல்களில் பயன்படுத்துவன எல்லாம் இந்த நான்கு வகைகளுக்குள் அடங்கும்.
இரண்டு பேர் (A, B என்று வைத்துக்கொள்வோம்) தங்களுக்கு இடையே பேசிக்கொள்ளும் உரையாடலில்… இரண்டு பகுதிகள் உள்ளன:
t பேசுபவர் பகுதி (யார் சொல்கிறார்கள் – என்பது) (Reporting Clause)
t பேசுகின்ற பகுதி (சொல்லும் செய்தி) (Reported Clause)
1. சாதாரண சொற்றொடர் (Simple Sentence)
அந்த உரையாடலில் “நடக்கின்ற’’ அல்லது ‘நடந்த’ ஒரு செய்தியை இயல்பாகச் சொல்லுவோம். (எ.கா: “நான் பூங்காவில் தினமும் நடக்கிறேன்’’, “நீ மிகவும் மகிழ்வாக இருந்தாய்’’, “நான் ஒரு புத்தகத்தை வாங்கினேன்’’). இந்தச் சொற்றொடர் சாதாரண சொற்றொடர். (ஆங்கிலத்தில் சொல்வதென்றால்… Subject + Verb + Object என்ற வரிசையில் அமைகின்ற இயல்பான சொற்றொடர்கள்)
எ.கா:
வான்மதி தென்னவனிடம் சொன்னாள்,
(Reporting Clause / பேசுபவர் பகுதி)
Vanmathi said to Thennavan,
“நான் ஒரு புத்தகத்தை வாங்கினேன்’’
(Reported Clause / பேசுகின்ற பகுதி)
“I bought a book”
S V O
S = Subject. V = Verb, O = Object
2. கேள்விச் சொற்றொடர்(Interrogative Sentence)
அந்த உரையாடலில் கேள்வி ஏதேனும் கேட்டால்…? (எ.கா: நீ விளையாடினாயா? உன்னுடைய தெளிவான குறிக்கோள் என்ன? உன் வயது என்ன?) இப்படி கேள்விகளுடன் அமைந்தால் அது கேள்விச் சொற்றொடர்.
எ.கா:
கபிலன் முகிலனிடம் சொன்னான், “உன்னுடைய வயது என்ன?’’
Kabilan said to Mugilan, “How old are you?”
(Reporting Clause/ பேசுபவர் பகுதி)
3. கட்டளைச் சொற்றொடர் (Imperative Sentence)
அந்த உரையாடலில் ஏதாவது வேண்டுகோள் வைத்தால், கட்டளையிட்டால், அறிவுரை சொன்னால், அல்லது மன்னிப்புக் கேட்டால் அது கட்டளைச் சொற்றொடர்.
எ.கா:
ஓவியன் இனியனிடம் சொன்னான், “காவல் துறைக்கு ஒரு விண்ணப்பம் எழுது’’
Ovian said to Iniyan, “Write a petition to Police department”
(Reporting Clause/ பேசுகின்ற பகுதி)
4. உணர்ச்சிச் சொற்றொடர் (Exclamatory Sentence)
அந்த உரையாடலில், மகிழ்ச்சியை வெளிப்படுத்த, துயரத்தை வெளிப்படுத்த, வெறுப்பை வெளிப்படுத்த சாதாரண சொற்றொடரோடு சில வியப்புச் சொற்களை, சில வியப்புக் குறியீடுகளைப் (எ.கா:”!”) பயன்படுத்தி உணர்ச்சிப் பூர்வமாகக் கூறினால் உணர்ச்சிச் சொற்றொடர்.
எ.கா:
முஸ்தபா ரகீமிடம் சொன்னான், “அருமை! தாஜ்மகால் ஒரு வியப்பான நினைவுச் சின்னம்!’’
Mustafa said to Rahim, “wow! Taj mahal is a wonderful monument!”
(Reporting Clause/ பேசுபவர் பகுதி) (Reported Clause / பேசுகின்ற பகுதி)
கீழேயுள்ள அட்டவணையில் நான்கு சொற்றொடர் ஒவ்வொன்றிற்கும் இரண்டு எடுத்துக்காட்டுகள் பார்ப்போம். இவற்றைத் தெரிந்து கொண்டால் நேர்கூற்றிலிருந்து அயற்கூற்றுக்கு மாற்றும் முறை பற்றி ஓரளவு தெரிந்து கொள்ளலாம். என்னென்ன மாற்றம் நடக்கிறது என்பதைப் பாருங்கள். பிறகு விளக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்.