அறிவியல்: செவ்வாயில் உயிர்களைத் தேடும் விடாமுயற்சி
வேற்றுக் கிரகவாசிகள் இருக்காங்களா? _ இல்லையா? ஒருவேளை இதுக்கு முன்னாடி இருந்தாங்களா? இல்ல, ஏதாச்சும் உயிரினம் இருந்துச்சா? பல ஆண்டுகளாக இந்தக் கேள்விகள் நம்மகிட்ட இருந்துக்கிட்டே இருக்கு. இந்தக் கேள்விகளுக்கான விடையைத் தேடுவதன் ஒரு பகுதியாக, நம்ம கோளுக்குப் பக்கத்தில் இருக்கும் செவ்வாய்க் கோளில் நிறைய ஆராய்ச்சிகள் நடந்துகிட்டு இருக்கு.
நமக்குத்தான் செவ்வாய்க் கோளை ரொம்பப் பிடிக்குமே! அதனால, பிப்ரவரி 2021இன்படி, மொத்தம் 5 தரையூர்திகள் (Rover) செவ்வாயில் இருக்கு. சோஜர்னர் (Sojourner)ஆப்பர்ச்சுனிட்டி (Opportunity),ஸ்பிரிட் (Spirit), கியுரியாசிட்டி(Curiosity), பர்சிவியரன்ஸ்(Perseverance). இவற்றில் கியுரியாசிட்டி, பர்சிவியரன்ஸ் இரண்டும் இப்போ இயங்கிக்கிட்டு இருக்கு.
‘மார்ஸ் 2021’ எனும் திட்டத்தின் (Mission) -இன், ஒரு பகுதியாக இருக்குற பர்சிவியரன்ஸ் தரையூர்தி, 18.2.2021 அன்னிக்கு செவ்வாயில் இருக்கும் ஜெசரியோ பள்ளத்தில் (Jezero Crater)இல் தரையிறங்குச்சு.
இந்தத் தரையூர்தியில், 19 ஒளிப்படக் கருவிகள், 2 ஒலி வாங்கிகளும்(Microphone) இருக்கு. செவ்வாயின் வளிமண்டலத்தில் CO2 அதிக அளவில் இருக்கும். CO2வை O2 ஆக மாற்ற ஒரு கருவி வடிவமைக்கப்பட்டு இருக்கு. அந்தக் கருவி இந்தத் தரையூர்தியில பொருத்தப்பட்டு இருக்கு. Supercam எனும் தொலைமுறை உணரும் கருவி (Remote Sensing Instrument), செவ்வாயில் உள்ள கல், மண் இவற்றை ஆய்வு செய்யும்.
இன்ஜியுனிட்டி(Ingeunity) என்கிற ஹெலிகாப்டரும் இந்தத் தரையூர்தியில் இருக்கு. தரையூர்தி அங்கு செயல்படும் காலத்துல, இரண்டு அல்லது மூன்று முறை, ஆய்வுக்காக, ஹெலிகாப்டர் வேலை செய்யும். செவ்வாயோட வளிமண்டலத்தின் அடர்த்தி, பூமியின் வளிமண்டலத்தின் 1%அய் விட கம்மியா இருக்கும். அதனால, இன்ஜியுனிட்டி, 1.8 கிலோகிராமைவிட குறைவான எடையைக் கொண்டுள்ளது.
எல்லாம் சரி, என்னதான் பண்ணப்போகுது இந்த பர்சிவியரன்ஸ்? செவ்வாயில் ஏதாச்சும் உயிரினம் வாழ்ந்து இருக்கா? செவ்வாயில் உயிர் வாழ முடியுமா? செவ்வாயோட நிலம் எப்படிப்பட்டது? இது மாதிரியான கேள்விகளுக்கு விடையைத் தேடுவதுதான் பர்சிவியரன்ஸோட வேலை. இந்தத் தரையூர்தி, சுமார் 12க்கும் மேல, செவ்வாயின் கல், மண்ணோட மாதிரிகளை எடுத்து பூமிக்கு 2030களில் அனுப்பப் போகுது.
எனக்கு பர்சிவியரன்ஸ் (விடாமுயற்சி) எனும் பெயர் ரொம்பப் பிடிச்சி இருந்தது. ஒரு விண்வெளி ஆராய்ச்சிக்கு, இந்தப் பெயர் ரொம்பப் பொருத்தமானது. நாசா நடத்திய ஒரு கட்டுரைப் போட்டியில் கலந்துக்கிட்டு, அதில் வெற்றிபெற்று இந்தத் தரையூர்திக்கு, ‘பர்சிவியரன்ஸ்’ என்று பெயர் சூட்டியது, 7ஆம் வகுப்பு பயிலும் அலெக்ஸ் மேத்தர்(Alex Mather).
செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்து இருக்கா என்பதை “பர்ஸிவியரன்ஸின்” உதவியுடன் விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சிடுவாங்க. பிடித்த துறையில் ஈடுபாடு மற்றும் “பர்சிவியரன்ஸோட’’ இருந்து, அலெக்ஸ் மேத்தரைப் போல வரலாற்றில் இடம் பிடிக்கலாம்.<