நடைமுறை : மூச்சுக்காற்று மறைக்காமல் முகக்கவசம்…
கா.அமுதரசன்
முகக்கவசம் அணிவதால் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனால், மூக்குக் கண்ணாடி அணிபவர்களுக்கு, முகக்கவசம் (மாஸ்க்) அணியும்போது விடும் மூச்சுக் காற்று கண்ணாடிக்குள் மூடுபனி போல் படிந்து கண்ணாடி மங்கலாகத் தெரியும். இதனால் கண்ணாடியை அடிக்கடி கழற்றித் துடைத்து மாற்ற வேண்டியதாக இருக்கும். இதனால் பார்வைத் திறனில் தெளிவின்மை உண்டாகிறது. இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?
1. முகக் கவசத்தை அணிவதற்கு முன்பு, மூக்குக் கண்ணாடிகளில் அல்லது அவற்றின் லென்சுகளில், அதிகப்படியாகப் படிந்து இருக்கும் ஈரப்பதம் நீங்கும் வரை சோப்பு நீரால் கழுவ வேண்டும். பின் அவற்றை நன்றாகக் காய வைக்க வேண்டும் அல்லது ஒரு சுத்தமான மைக்ரோஃபைபர் துணி கொண்டு அதன் மேல் இருக்கும் ஈரத்தைத் துடைக்க வேண்டும்.
2. முகக்கவசத்திற்கு உள்ளேயே மூச்சுவிடும் அளவிற்கு நாம் முகக்கவசத்தை மிகச் சரியான முறையில் அணிய வேண்டும். அதனால் வெளியேறும் வெப்பக் காற்று நமது மூக்குக் கண்ணாடிகளை அடைந்து அவற்றை மங்கச் செய்யாது.
3. முகக்கவசம் அணியும்போது அதில் உள்ள பிளாஸ்டிக் கம்பியை மூக்கின் மேல், படுக்கை வசமாக இரண்டு பக்கமும் படிந்துவிடக்கூடிய வகையில் அழுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு பக்கமும் அந்த பிளாஸ்டிக் கம்பி நமது முகக்கவசத்தை மிகச் சரியாக கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். அதனால் முகக்கவசம் விலகுவதற்கும் வழி இருக்காது. அதனால் நாம் வெளியிடும் வெப்ப மூச்சுக் காற்று மூக்குக் கண்ணாடிகளை நோக்கிச் செல்ல முடியாமல் தடுக்கப்படும்.
4. பிளாஸ்டிக் கம்பி இல்லாத முகக் கவசங்களில்: நீங்கள் பயன்படுத்தும் முகக்கவசத்தின் மீது மேல்புறம் மூக்குப் பகுதியில் சாதாரணமான டிஷ்யூ பேப்பரை பக்கவாட்டின் இருபுறங்களிலும் மடித்து, பேப்பரை இரண்டு அல்லது மூன்று மடக்காக்கி முகக்கவசத்தில் வைத்து அவை நகராமல் அப்படியே முகக்கவசம் கட்டிவிட வேண்டும். இதனால் முகக்கவசத்தை தொடர்ந்து பயன்படுத்தினாலும் சுவாசத்தால் ஏற்படும் ஈரத்தை டிஷ்யூ பேப்பர் உறிஞ்சிக்கொள்வதால் ஈரம் கண்ணாடியில் படாது. அதுமட்டுமல்லாமல் முகக்கவசத்தின் மேல் பகுதியும் பாதுகாப்பாக இருக்கும்.
5. முகக்கவசத்திற்கு மேல் மூக்குக்கண்ணாடி அணியும்போது, மேலே இழுத்து, உங்களது மூக்குக்கண்ணாடியைச் சரி செய்யமுடியும். அதனால் மூக்குக்கண்ணாடி, முகக்கவசத்திற்கு மேல் மிகவும் இறுக்கமாக அமர்ந்திருக்கும்.
6. உங்களின் கண்ணாடிக்கு ஸ்பெஷல் கோட்டிங் செய்யவில்லை எனில், கவலை இல்லை. முகச் சவரத்திற்குப் பயன்படுத்தும் போம் (திஷீணீனீ) –_அய் கண்ணாடிகளின் உள்புறத்தில் பூசி துடைத்துவிட்டு அப்படியே காய வையுங்கள். ஈரம் போனதும் பயன்படுத்துங்கள். இதனால் சோப்பு கண்ணாடியில் லேயராக படிந்து நீர்த்துளி மூடுபனி போல் படிவதைத் தடுக்கும்.<