கோடை மழை!
குற்றா லத்து மலையிலே
கோடை மழை கொட்டுது!
வற்றா மலே அருவிகள்
வாரி நீரைக் கொட்டுது!
மற்ற மற்ற உயிரெலாம்
மகிழ்ச்சி யாகச் சுற்றுது!
பற்றும் தீயின் நுண்மியால்
பயத்தை மனிதம் பெற்றது!
அற்பு தத்தைச் சுகிக்கவே
ஆசை நெஞ்சில் தொக்குது!
உற்ற சொந்தம் அனைத்துமே
ஊர டங்கில் சிக்குது!
கற்கா லத்து மனிதராய்க்
கலக்கம் தேவை அற்றது!
பொற்கா லத்து மனிதம்நாம்
புரட்சி பூக்க உற்றது!
சற்றே நாமும் அமைதியும்
சாந்தம் நிரம்பப் பட்டிடின்
முற்றி லுமாய் அனைவர்க்கும்
மூச்சுத் திணறல் விட்டிடும்!
விற்ப னராய்க் கொரோனாவை
விரட்டி விரைவில் ஒழிக்கலாம்!
கற்ப னைக்கும் அதிகமாய்க்
களிப்பில் முழுகிக் குளிக்கலாம்!
– தளவை இளங்குமரன், இலஞ்சி