இது புதுசு! – அய்ன்ஸ்டீனுடன் பேசலாங்களா?
“What If I told you, that You can chat with the great Albert Einstein? Would you believe me?’’
இணையம் ஊடாக அய்ன்ஸ்டீனுடன் நீங்கள் உரையாட முடியுமென்று நான் சொன்னால்?
யுனீக்யு (UneeQ) நிறுவனம் அண்மையில் ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறது. அதில் சார்புக் கோட்பாட்டின் (Relativity Theory) தந்தையான ஆல்பர்ட் அய்ன்ஸ்டீனுடன் மற்றவர்கள் இணைய உரையாடல் (Chat) செய்வதுபோன்ற காட்சிகள் வெளியிடப்-பட்டுள்ளன.
யுனீக்யு தொழில்நுட்பப் பயன்பாட்டாளர்கள், இனி வரும் காலத்தில், டிஜிட்டல் அய்ன்ஸ்டீனுடன் உரையாடவோ, கேள்விகளைக் கேட்கவோ முடியும். ஜெர்மனியர்களின் ஆங்கில உச்சரிப்புடன் அய்ன்ஸ்டீன் உங்களுடன் உரையாடுவார்.
The UneeQ published a video of its artificial intelligence project Digital Einstein that has the father of relativity theory chat with a fictional version of his human Sofia.
Users of UneeQ technology will be able to chat with the iconic Nobel Prize in Physics, who will answer their questions. Of course, with a slight German accent.
3 டி (முப்பரிமாண) தொழில்நுட்பத்தில் துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ள அய்ன்ஸ்டீனின் உருவத்துடன் உரையாடுவது நிச்சயமாக புதிய அனுபவத்தைக் கொடுக்கும். பழைய காலத்து எம்.எஸ்.டாஸின் எலிசா, இன்றைய ஆப்பிளின் சிரி (Siri), அமேசானின் அலெக்ஸா, கூகிளின் அசிஸ்டெண்ட் இவையெல்லாம் எழுத்து, குரல்வழி நம்முடன் உரையாடியதுபோல அய்ன்ஸ்டீன் காட்சியிலேயே, அவருடைய குரலிலேயே உரையாடுவார். மறக்காமல் அந்த அனுபவத்தைப் பெறுங்கள்.
einstein.digitalhumans.com
இனிவரும் காலங்களில் பெரியார் தாத்தாவும் உங்களோடு இப்படி உரையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.