மாண்டிசோரி (Montessori) முறை என்றால் என்ன?
மருத்துவ டாக்டர் மேரியா மாண்டிசோரி என்னும் இத்தாலிய அம்மையாரால் உருவாக்கப்பட்ட முறை. மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு மருத்துவம் பார்க்கும்போது அவர்கள்பால் மனவெழுச்சி காரணமாக அவர்களுக்குக் கல்வி புகட்டி பொதுத் தேர்வுக்கு அனுப்பினார். அச்சிறுவர்களின் சாதனை சிறப்பாக இருந்தது. ஆகவே, மேலும் ஆராய்ச்சி செய்து அவர்களுக்குக் கல்வி கற்பிக்க முயன்ற புதிய முறைதான் இது.
இம்முறையின் அடிப்படைத் தத்துவங்கள்: துணைக்கருவிகள் மூலம்,
i. குழந்தைகள் தானாகவே கற்கின்றன.
ii. ஆசிரியரின் கற்பித்தலுக்கு முக்கியத்துவத்தைக் குறைத்து, “குழந்தைகளின் கற்றலுக்கு’’ முதன்முதலில் ஏற்றம் கொடுக்கப்படுகிறது.
iii. தானாகக் கற்கும் கல்வியே உண்மையான கல்வி.