• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] – 26

2021_sep_v44
இலக்கணம்செப்டம்பர் 2021

கே.பாண்டுரங்கன்

இதுவரை உரையாடல் சொற்றொடரில்…

இடப்புறம் பேசுபவர் பகுதியைப் பார்த்தோம். இனி…

வலப் புறம் மட்டும் பார்ப்போம்

அதுதான் பேசுகின்ற பகுதி (Reported Speech) அல்லது உரையாடல் பகுதி. அதாவது “அடைப்புக் குறி”க்குள் உள்ள பகுதி.

ஒரு பரிசல் அல்லது படகு மூலம் ஆற்றில் பயணம் செய்வதாயிருந்தால் என்ன செய்வோம்?

துடுப்பைக் கொண்டு காற்றின் திசையறிந்து நீரைக் கிழித்து, முழுவிசையுடன் முன்னேற முயற்சிப்போம் அல்லவா?

இந்தப் படகை எதிர்ப் பகுதிக்கு அதாவது அயல் பகுதிக்குக் கொண்டு செல்ல துடுப்பு போன்ற சில வழிமுறைகளைக் கையாள வேண்டுமல்லவா?

உரையாடலும் அப்படித்தான். எதையாவது நம் விருப்பத்திற்குப் பேசிவிட முடியாது. நேர்க் கூற்றில் உள்ள சொற்றொடர் இக்கரையில் உள்ள படகு போல.  இதனை அக்கரைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதாவது அயற்கூற்றுக்கு மாற்ற வேண்டும்.

அப்போது செய்யவேண்டியவை என்ன?

அதற்கு, மொத்தம் 6  வழிமுறைகள் (6 steps) உள்ளன. (முதலில் சுருக்கமாகப் பார்ப்போம்)

1.  முதலில் அடைப்புக்குறியை (Inverted commas) நீக்க வேண்டும்.

2.  இணைப்புச் சொல்லை (Conjunction) போட வேண்டும்.

3.  பிரதிப் பெயர்ச் சொல்லை (Pronoun) மாற்ற வேண்டும்.

4.  காலத்தை (Tense) மாற்ற வேண்டும்.

* நிகழ் காலமாக (Present tense) இருந்தால் இறந்த காலமாக (Past tense) மாற்ற வேண்டும்.

(பேசுபவர் பகுதி  நிகழ் காலத்தைக் குறிப்பதாக  இருந்தால் பேசுகின்ற பகுதியில் நிகழ் காலத்தை மாற்ற வேண்டியதில்லை).

உலக உண்மைகள், பழமொழிகள் போன்றவையும் நிகழ் காலத்திலிருந்து மாறாமல் நிகழ் காலமாகவே இருக்கும்.

* இறந்த காலமாக (Past tense) இருந்தால் இறந்த கால வினைமுற்றுக்கு (Past perfect tense) மாற்ற வேண்டும்.

5. காலமும்  இடமும் சார்ந்த சொற்களை (Time and place) மாற்ற வேண்டும்.

சில சொற்கள் நேர்க் கூற்றுக்குப் பொருத்தமாகவும் அயற்கூற்றுக்குப் பொருத்தமில்லாததாகவும் இருக்கும். அவற்றை (வரும் அட்டவணைக்கேற்ப) புதிய சொல்லாக மாற்ற வேண்டும்.

6.            ஆங்கில இலக்கண அமைப்புப்படி சொற்களை  இடமாற்றம் (Placement மாற்றத்தை) செய்ய வேண்டும்.

அவ்வளவுதான்…

நேர்க்கூற்றிலிருந்து அயற்கூற்றுக்கு எளிதாக, அழகாக மாற்றி விடலாம் _ குழப்பமில்லாமல்!

ஏற்கெனவே நேர்க்கூற்று-அயற்கூற்றுக்கு பல வகையான எடுத்துக் காட்டுகளைப் பார்த்திருக்கின்றோம். ஆனால், அதன் வழிமுறைகளை (Steps) இப்போதுதான் பார்க்கிறோம்.

மொத்தம் 6  முறைகள் (6 Steps) (விரிவாக)

(வழிமுறை) Step : 1

முதலில் [“  ”] அடைப்புக்குறியை நீக்க வேண்டும். அதாவது Inverted commas-அய் நீக்க வேண்டும்.

எடுத்துக்காட்டு:

நான் சொல்கிறேன், “நீ ஒரு நல்ல மனிதன்” (நேர்க்கூற்று)

நான் சொல்கிறேன் அவன் ஒரு நல்ல மனிதனாய் இருக்கிறான் என்று. (அயற்கூற்று)

I say, “you are a good person” (Direct Speech)
I say that he is a good person (Indirect Speech)

இரண்டாவதாக எழுதப்பட்டுள்ள அயற்கூற்றில் (Indirect Speech-இல்) அடைப்புக் குறிகள் நீக்கப்பட்டுள்ளதை கவனியுங்கள்.

(வழிமுறை) Step : 2

Conjunction  (இணைப்புச் சொல் வழிமுறை)

 

கீழேயுள்ள இணைப்புச் சொற்களை மட்டும் நன்றாகக் கவனியுங்கள்!

எ-கா : 1 சாதாரண உரையாடல்

தமிழ்மணி தங்கமணியிடம் சொன்னார், “நான் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன்’’ (நேர்க்கூற்று)

தமிழ்மணி தங்கமணியிடம் தான் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்ததாகச் சொன்னார்.  (அயற்கூற்று)

Thamizhmani said to Thangamani, “I am doing health-exercise” (Direct Speech)

Thamizhmani told Thangamani that he was doing health-exercise. (Indirect Speech)

எ-கா : 2 கட்டளை உரையாடல்

தமிழ்மணி தங்கமணியிடம் சொன்னார், “எழுந்திரு!” (நேர்க்கூற்று)

தமிழ்மணி தங்கமணியிடம் எழுவதற்கு அறிவுறுத்தினார். (அயற்கூற்று)

Thamizhmani said to Thangamani, “Get up!”
(Direct Speech)

Thamizhmani advised Thangamani to get up.
(Indirect Speech)

எ-கா : 3  கேள்வி உரையாடல்

தமிழ்மணி தங்கமணியிடம் சொன்னார், “நன்றாகத் தூங்கினீர்களா?” (நேர்க்கூற்று)

தமிழ்மணி தங்கமணியிடம் நன்றாகத் தூங்கினாரா என வினவினார். (அயற்கூற்று)

Thamizhmani said to Thangamani, “Did you sleep well?” (Direct Speech)

Thamizhmani asked Thangamani if/whether he slept well. (Indirect Speech)

எ-கா : 4 உணர்ச்சி உரையாடல்

தமிழ்மணி தங்கமணியிடம் சொன்னார், “என்னே அருமை! நீங்கள் செய்த உணவு!” (நேர்க்கூற்று)

தமிழ்மணி தங்கமணியிடம் அவர் செய்த உணவு மிக நன்றாக இருந்தது என்று வியந்தார். (அயற்கூற்று)

Thamizhmani said to Thangamani, “wow! what a tasty food you cooked|” (Direct Speech)

Thamizhmani exclaimed Thangamani that he cooked very tasty food. (Indirect Speech)

(வழிமுறைகள் தொடரும்)

43
மாண்டிசோரி (Montessori) முறை என்றால் என்ன?மாண்டிசோரி (Montessori) முறை என்றால் என்ன?2nd September 2021
கல்வியே கண்!28th September 2021கல்வியே கண்!

மற்ற படைப்புகள்

2021_sep_v32
கதை கேளு கதை கேளுசெப்டம்பர் 2021
2nd September 2021 by விழியன்

கசியும் மணல்

Read More
2023_jan_18
இலக்கணம்ஜனவரி 2023
5th January 2023 by ஆசிரியர்

 தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்

Read More
2021_sep_v22
செப்டம்பர் 2021பிஞ்சுகள் பக்கம்
31st August 2021 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2021_sep_v9
செப்டம்பர் 2021பிஞ்சுகள் பக்கம்
30th August 2021 by ஆசிரியர்

முதல்வரை நெகிழ்வித்த வம்சிக்!

Read More
2021_sep_v15
செப்டம்பர் 2021பிஞ்சுகள் பக்கம்
30th August 2021 by ஆசிரியர்

நினைவில் நிறுத்துவோம் : சாதிக்க வயது தடையில்லை!

Read More
இலக்கணம்நவம்பர் 2022
8th November 2022 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்-37

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p