தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] – 28
கே.பாண்டுரங்கன்
(தொடர்ச்சி)
வழிமுறை: 3
வண்ணங்கள் (Colours) வெவ்வேறு தானே?
இவற்றின் கலவைதானே ஓவியம்!
விரல்கள் வெவ்வேறு தானே?
அவை இணைந்துள்ளவைதானே நமது கைகள்! கால்கள்!
அதுபோல Pronounகள் வெவ்வேறு தானே? இவற்றின் பல்வேறு வடிவங்கள் ஒரு மனிதனை மற்றொரு மனிதனோடு இணைத்து ஓர் உரையாடல் எனும் முழு சொற்றொடர் உருவத்தை உருவாக்குகின்றது அல்லவா?
Pronoun Rules
(ஆ)
‘நீ’’ ‘என்’னிடம் உரையாடும்போது, உரையாடல் பகுதியில் (பேசுகின்ற பகுதியில்) உள்ள ‘நான்’ ‘நீ’ ஆகவும், ‘நீ’ ‘நானா’கவும் மாறுகிறோம். அவன்/அவள் மாறுவதில்லை.
போன இதழில் பேசுபவர் பகுதியில் பேசுபவர் நான் _ ஆகவும், கேட்பவர் நீ _ ஆகவும் இருந்தோம்.
அதாவது, I said to You,
இந்த இதழில் பேசுபவர் நீ ஆகவும், கேட்பவர் நான் ஆகவும் இருக்கிறோம்.
அதாவது, You said to Me,
அதனை அட்டவணையில் உள்ள Reporting part அய்ப் பார்த்தால் (ஒரு முறை பார்த்துவிட்டு வாருங்கள்!) உங்களால் அறிந்துகொள்ள முடியும். இப்போது (பேசப்பட்ட பகுதியில்) Reported partஇல் மாற்றத்தைக் கவனியுங்கள்!
சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போமா?
(வலது பக்கத்தில் (பேசப்பட்ட பகுதியில்) Pronoun மாற்றத்தைப் பாருங்கள்)
[Direct Speech]You said to me, “You are laughing at my Eyes”
[Indirect Speech]You told me that I was laughing at your Eyes.
***
[Direct Speech]You said to me, “I like you very much”
[Indirect Speech]You told me that You liked me very much.
***
[Direct Speech]You said to me, “How many times are you laughing in a day?”
[Indirect Speech]You asked me how many times I was laughing in a day.
***
[Direct Speech]You said to me, “update my details”
[Indirect Speech]You requested me to update your details
***
[Direct Speech]You said to me, “oh! I forgot to bring your passport!”
[Indirect Speech]You exclaimed (worried) me that -> You forgot to bring my passport.
வழிமுறைகள் வளரும்