இசைப்போம் வாரீர்! – தலைவாரிப் பூச்சூடி
இசைக் குறிப்பு: விஜய் பிரபு
Scale : G minor / Sign 5/8
பாடலாசிரியர்: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
பல்லவி (ராகம்: சிந்துபைரவி)
தலைவாரிப் பூச்சூடி உன்னை
/பதபாம / காரீச / ரீச /
தலைவாரிப் பூச்சூடி உன்னைப் – பாட
/பதபாம / காரீச / ரீச / சாச /
சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை!
/சாகக / கா மாமா / கமசாக / பதபா /
(தலைவாரிப் பூச்சூடி)
சிலைபோல ஏனங்கு நின்றாய்
/ தததாத / பத காம / தநிபா /
சிலைபோல ஏனங்கு நின்றாய் – நீ
/ தததாத / பத காம / தநிபா / ப /
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்
/பாதாதா / மா மாம / காமாம. / ரிசா /
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்
/ பாதாதா/ மா மாம/ காமாம / ரிசா /
(தலைவாரிப் பூச்சூடி)
சரணம் 1
விலைபோட்டு வாங்கவா முடியும்?
/பதபாம / காகப / ரீசா / சா க / கா ம / பதபா /
விலைபோட்டு வாங்கவா முடியும்? – கல்வி
/பா ப / பதபாம / காகப / ரீசா / ரீநி /
வேளைதோறும் கற்று வருவதால் படியும் – கல்வி
/ சாகக மா மாம / காமசா பபதாப / ரீநி /
வேளைதோறும் கற்று வருவதால் படியும்
/ சாகக மா மாம / காமசா பபதாப /
மலைவாழை அல்லவோ கல்வி – நீ
/தததாத / பாதாம / மாப / ப /
மலைவாழை அல்லவோ கல்வி – நீ
/ நிநிநீநி / நீதமதநிபா / ப /
வாயார உண்ணுவாய் போ என் புதல்வி
/ பாதாதா / மாமாமா / காமாமாரிசா /
வாயார உண்ணுவாய் போ என் புதல்வி
/ பாதாதா / மாமாமா / காமாமாரிசா /
(தலைவாரிப் பூச்சூடி)
சரணம் 2 (ராகம்: சுபபந்துவராளி)
படியாத பெண்ணாயிருந்தால் – கேலி
/பதபாம / காரிசரிக காச / சாரி /
பண்ணுவார் என்னை இவ்வூரார் தெரிந்தால்
/ காபாமபாப / பதபாமகாப /
படியாத பெண்ணாயிருந்தால் – கேலி
/பதபாம / காரிசரிக காச / சாரி /
பண்ணுவார் என்னை இவ்வூரார் தெரிந்தால்
/ காபாமபாப / பதபாமகாப /
கடிகாரம் ஓடு முன் ஓடு!
/காரிகம / பதாநி / சரிச /
கடிகாரம் ஓடு முன் ஓடு – என்
/காரிகம / பதாநி / சரிச / ப /
கண்ணல்ல, அண்டை வீட்டுப் பெண்களோடு
/ பசதாப/ பதபாமகாரிச /
(தலைவாரிப் பூச்சூடி)
சரணம் 3 (ராகம்: தேஷ்)
கடிதாய் இருக்கும் இப்போது – கல்வி
/ பதமாகரி / நீச / ரிகரீ / ரீநி /
கற்றிடக் கற்றிடத் தெரியுமப்போது
/ரீமம / பாபப / ரிமபாநிதாபா /
கடிதாய் இருக்கும் இப்போது – கல்வி
/ பதமாகரி / நீச / ரிகரீ / ரீநி /
கற்றிடக் கற்றிடத் தெரியுமப்போது
/ரீமம / பாபப / ரிமபாநிதாபா /
கடல் சூழ்ந்த இத்தமிழ்நாடு
/கப / நீநி / நீநிநிசநிநிசநி ப /
கடல் சூழ்ந்த இத்தமிழ்நாடு – பெண்
/கப / நீநி / நீநிநிசநிநிசநி ப /
கல்வி பெண்கல்வி என்கிறது அன்போடு
/ரீநி / ச சாச / நிதாப/ சசதமாசாநி /
கல்வி பெண்கல்வி என்கிறது அன்போடு
/ரீநி / ச சாச / நிதாப / சசதமாசாநி /
மீண்டும் பல்லவி (ராகம்: சிந்துபைரவி)
தலைவாரிப் பூச்சூடி உன்னைப் – பாட
/பதபாம / காரீச / ரீச / சாச /
சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை!
/சாகக / கா மாமா / கமசாக / பதபா /
பாடலை இந்த QR Code-அய் ஸ்கேன் செய்து கேளுங்கள்!
இசைக்கப் பழகுங்கள்!