கணக்கு: எண்ணோடு விளையாடு!
அன்பார்ந்த பெரியார் பிஞ்சுகளே,
தொற்று வேகமாக பரவக்கூடிய இந்தக் காலத்தில் கவனமாக இருங்கள். கூடி விளையாடுவது மகிழ்ச்சி என்றாலும் இந்தத் தொற்றுக் காலத்தில் கூடி விளையாடுவதைத் தவிருங்கள். வீட்டில் இருங்கள். தனிமை சுமையாக இருக்கும். எனவே, எண்களோடு விளையாடுங்கள். இப்பகுதியில் வரும் கணக்குகளைச் செய்து பார்த்துச் சுறுசுறுப்பாக இருங்கள்.
இந்த மாத கணக்குகள்:
பெருக்கல் வாய்பாடு இல்லாமல் பெருக்கல் கணக்குகளை எளிதில் எவ்வாறு செய்வது என்பதைப் பார்ப்போம். மீண்டும் மீண்டும் பயிற்சி எடுப்பதன் மூலம் எவ்வளவு பெரிய பெருக்கல் கணக்குகளையும் எளிதில் சில நொடிகளில் செய்து முடிக்க முடியும்.
இப்போது பெரிய எண்களை எவ்வாறு எளிதில் 11 முதல் 12 ஆகிய எண்களால் பெருக்கலாம் என்பதைப் பார்ப்போம்.
ஓர் எண்ணை 11ஆல் பெருக்கல்.
எ.கா.1:
7213424 x 11 = 79347664
விளக்கம்:
1. முதல் இலக்கத்தை (அதாவது கடைசியில் உள்ள எண்ணான 4.அய்) அப்படியே விடையில் முதல் இலக்கமாக எழுத வேண்டும்.
2. இரண்டாவது இலக்கத்தையும் முதல் இலக்கத்தையும் கூட்டி விடையில் இரண்டாவது இலக்கமாக எழுத வேண்டும். (2+4=6)
3. இதேபோல் கூட்டிக் கூட்டி விடையில் எழுத வேண்டும். கடைசி இலக்கத்தை விடையில் அப்படியே எழுத வேண்டும். (7)
எ.கா.2:
988493 x 11 = 10873423
விளக்கம்:
1. முதல் இலக்கத்தை (அதாவது கடைசியில் உள்ள எண்ணான 3.அய்) அப்படியே விடையின் முதல் இலக்கமாக எழுத வேண்டும்.
2. இரண்டாம் இலக்கத்தையும் (9) முதல் இலக்கத்தையும் (3) கூட்ட வேண்டும். 9+3=12. இதில் 2அய் மட்டும் விடையின் இரண்டாம் இலக்கமாக எழுதவும். 1அய் மூன்றாம் இலக்கத்தோடு கூட்டி (4+1=5) அதை இரண்டாம் இலக்கத்தோடு கூட்ட வேண்டும். அதாவது 5+9=14. இதில் 4அய் விடையின் மூன்றாம் இலக்கமாக எழுதி 1அய் நான்காம் இலக்கத்தோடு கூட்ட வேண்டும்.
3. கடைசி இலக்கத்தோடு அதாவது 9 உடன் அதற்கு முந்தைய கூட்டலில் வந்த மீதியைக் கூட்டி விடையின் கடைசி இலக்கமாக எழுத வேண்டும். 9+1=10
செய்து பார்க்கச் சில கணக்குகள்:
1. 5432421 x 11
2. 789548 x 11
3. 15299988 x 11
4. 888888 x 11
5. 98765432 x 11
6. 5034081 x 11
கடந்த மாதக் கணக்குகளுக்கான
விடைகள்:
1. எ.கா: 345 x 11 x 7 x 13 = 3,45,345
எடுத்துக்கொண்ட எண்ணை இருமுறை எழுதினால் விடை.
2. 60 துண்டுகளாக வெட்ட 59 நொடிகள் ஆகும்.
3.