தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] – 30
கே.பாண்டுரங்கன்
I said to you
You said to me
I said to him…
என்றவாறு உரையாடுபவர் பகுதி (Reporting Part) இருந்தால், உரையாடல் பகுதியில் (Reported Partஇல்) ஏற்பட்ட Pronoun மாற்றங்களை இதுவரை பார்த்தோம்!
இப்போது…
He said to me,
(உரையாடுபவர் பகுதியில்) இப்படி இருந்தால்…
அதாவது சொல்லுபவர் படர்க்கை (3rd Person) ஆகவும், கேட்பவர் தன்மை நிலை (1st Person)-ஆகவும் இருந்தால்,
உரையாடல் பகுதியில் Pronoun மாற்றம் எப்படி இருக்கும்?
வாருங்கள் பிரிவு (ஈ)இல் பார்ப்போம்.
வழிமுறை : 3 (தொடர்ச்சி)
Pronoun Rules
பிரிவு (ஈ)
‘அவன்’ அல்லது அவள் – ‘என்’னிடம் உரையாடும்போது, உரையாடல் பகுதியில் (பேசுகின்ற பகுதியில்) உள்ள
‘நான்’ என்று சொல்பவன் ‘அவன்’ என்று மாறுவான் (I –> He)
அல்லது ‘அவள்’ என்று மாறுவாள் (I –> She)
ஆனால்,
‘நீ’ என்று சொல்லப்படுபவன் / சொல்லப்படுபவள்
‘நான்’ ஆக மாறுவேன் (You –> I)
என்னது, புரியவில்லையா?
எ-_கா: பாருங்கள்!
[Direct Speech]Pozhilan (He) said to me, “I alerted you about the heavy rain”
[Indirect Speech]Pozhilan (He) told me that he had alerted me about the heavy rain.
(நேர்க்கூற்று)
பொழிலன் (அவன்) என்னிடம் சொன்னான், “நான் அந்த பலத்த மழை குறித்து உன்னை எச்சரித்தேன்.’’
(அயற்கூற்று)
பொழிலன் (அவன்) என்னிடம் பகன்றான் அவன் அந்த பலத்த மழை குறித்து என்னை எச்சரித்திருந்ததாக.
இந்த ஓர் எடுத்துக்காட்டுடன் முடிப்போம்.
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்பதுதான் இப்போதைக்கு நல்லது. ஏனென்றால் அண்மைக் காலத்திய Episode களில் நிறைய வார்த்தைகளை நான், அவன், நீ என்று திரும்பத் திரும்பப் படிப்பதால், ‘மூளைச் சலிப்பு’ ஏற்படலாம் அல்லவா?
அதனால் _
இங்கே உள்ள எ.கா… மேலே பெட்டியில் கொடுக்கப்பட்ட வழிமுறை Pronoun Rules (பிரிவு_ஈ)யுடன் எப்படி ஒத்துப் போகிறது… என்பதை மெதுவாகப் புரிந்து ஒரு முறை பாருங்கள், பின் படியுங்கள், தெளிவாகுங்கள்!
சாதாரணமாக, இருவர் (Direct Speech) நேரடியாகப் பேசிக்கொள்ளும்போது Pronoun எப்படி உள்ளது, பிறகு அவ்விருவர் பேசியதை இன்னொருவர் (Indirect Speech) எடுத்துச் சொல்லும்போது Pronoun எப்படி உள்ளது என்பதைக் கூர்ந்து பாருங்கள்!
அட்டவணையும் முக்கியம் பிஞ்சுகளே! ஒருமுறை உங்கள் பார்வையை வேகமாக இந்த அட்டவணையின் மீது ஓட்டுங்கள்! Pronoun-கள் (பிரதிப் பெயர்ச் சொற்கள்) எப்படி மாறுகின்றன என்பதை கவனத்தில் ஏற்றுங்கள்!
மேலே உள்ள அட்டவணை ஓர் அவசரப்-பார்வையிடலுக்குப் பயன்படும். இதன் அடிப்படையைப் புரிந்து கொண்டால் இன்னும் எளிமையாக இருக்கும். இன்னொருவர் உங்களிடம் சொன்ன செய்தியைப் பற்றி நீங்கள் சொல்லும் போது என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அதுதான் இங்கு நடக்கிறது. ‘நீ ஒழுங்காகப் படி! என்று அம்மா உங்களிடம் சொன்னதை நீங்கள் அப்பாவிடம் சொல்லும்போது என்ன சொல்வீர்கள்? ‘அம்மா என்னை ஒழுங்காகப் படிக்கச் சொன்னாங்க’ என்று தானே சொல்வீர்கள்.
பொழிலன் _ “நான்” என்று சொல்வது பொழிலனைத் தானே குறிக்கும்.
பொழிலன் “நீ” என்று என்னைப் பார்த்துச் சொன்னது என்னைத் தானே குறிக்கும்.
இப்போது முன்னர் நாம் கண்ட எடுத்துக்காட்டைப் படித்துப் பாருங்கள். புரியவில்லையா? எங்களுக்கு உங்கள் சந்தேகத்தைக் கேட்டு 9710944819 என்ற எண்ணுக்கு ஆடியோ அனுப்புங்கள்.
(வழிமுறைகள் வளரும்)