ஏன் ONTY ONE இல்லை
ஏன் 11 ஆங்கிலத்தில் onty one என்று அழைக்காமல் Eleven என்று அழைக்கிறோம்? சிரிப்பை மீறி, இது உலகம் முழுவதும் மனித சமூகம் பயன்படுத்திய எண் வகைகளைக் குறிக்கிறது.
ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு பழங்குடியினக் குழுவினருக்கு எண் என்பது மொத்தமே இரண்டு தான். இரண்டு இரண்டாக ஜதை பிரித்துக் கொள்வார்கள்.
தமிழர்கள் பயன்படுத்தியது டெசிமல் எனும் தசம எண்கள். அதாவது பத்து எண்கள் வரை வேறு பெயர்கள் இருக்கும். அதன்பின் ஒவ்வொரு பத்திற்கும் எண்களைப் பின்னிக்கொண்டே போவார்கள். பத்தின் ஒன்று (11), இரு பத்தின் ஒன்று (21), மூன்று பத்தின் ஒன்று (31).
ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் இருபது முறை. அதாவது இருபது எண்கள் வரை வெவ்வேறு சொல்லில் குறிப்பார்கள். அதான் onty one இல்லை eleven.
இதுபோல் நீங்கள் 6, 12 அடிப்படைகளைக் கொண்ட எண்களும் உள்ளன. நீங்கள் தச்சரிடம் சென்றால் அவர் 12 அடிப்படையிலேயே கணக்கிடுவார்.
– வினோத் குமார். ஏ