• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by விழியன்

பம்பம்டோலேய்….

2022_July_ne1
கதை கேளு கதை கேளுஜூலை 2022

நீநிஜூஜு ஒரு குட்டிப்பெண். நீநிஜூஜுவின் பெற்றோர் இருவரும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நகம் வெட்டிக்கொள்ளாததால் அன்று அவள் பள்ளிக்குச் செல்லவில்லை. நீநிஜூஜு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தாள். ‘டொக் டொக்…டொக் டொக்’ என கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. “அட யாருப்பா இந்த நேரத்தில’’ என எழுந்து வந்து கதவைத் திறந்தாள். வெளியே யாரும் இல்லை. நான்கு பெரிய்ய்ய்ய கால்கள் மட்டும் தெரிந்தது. தலையை வெளியே நீட்டிப் பார்த்தாள் நீநிஜூஜு.

நீநிஜூஜுவை நீநி என்றும் அழைக்கலாம் ஜூஜு என்றும் கூப்பிடலாம். அதனால் குழப்பம் வேண்டாம். வெளியே எட்டிப்பார்த்தபோது நாலு மாடி உயரத்திற்கு ஒரு மிருகம் நின்று கொண்டு இருந்தது. அதனுடைய கால்களைத் தான் வாசலில் பார்த்திருக்கிறாள் நீநி. அந்தப் பெரிய மிருகம் பச்சை நிறத்தில் இருந்தது. அதன் பற்கள் ஒவ்வொன்றும் நம்முடைய கைகள் அளவிற்கு இருந்தது. இரண்டு கண்கள். நீண்ட கழுத்து.

‘என்ன வேண்டும்’ என கைகாட்டிக் கேட்டாள் _ அதன் தலையைப் பார்த்து. அந்த மிருகத்தின் தலை நான்கு மாடி உயரத்தில் இருந்ததால் அதற்கு நீநிஜூஜு பேசுவது கேட்கவில்லை.

உடனே நீநிஜூஜுவுக்கு ஒரு யோசனை வந்தது. அவளது பெற்றோர் கண்டுபிடித்திருந்த ‘பம்பம்போலே’ என்ற ஒரு மருந்தை எடுத்துக் குடித்தார். உடனே அவள் அந்த மிருகத்தின் உயரம் அளவிற்கு பெரியவளாக மாறினாள். ‘ம்ம் இப்ப சொல், என்ன வேணும் உனக்கு? எதுக்கு இப்ப என்னை எழுப்பினாய்?’ என்று கேட்டாள்.

‘எனக்கு ரொம்பப் பசிக்குது. சாப்பிட எதுவுமே கிடைக்கல, ஏதாச்சும் சாப்பிட தாயேன்..’

‘சரி, நீ இவ்வளவு பெருசா இருந்தா எப்படி வீட்டுக்குள்ள வருவ? இரு.’ என்று சொல்லி குட்டியாவதற்கு உள்ள ‘போலே பம்பம்’ மாற்று மருந்தைக் கொடுத்து அதன் தலையில் ஒரு குட்டு குட்டினாள். உடனே அது நாய்குட்டி அளவிற்கு சிறியதாக மாறிவிட்டது. நீநியும் அவளுடைய சாதாரண உருவத்திற்கு வந்துவிட்டாள். ‘வா’ என ஒரு நாய்குட்டியை அழைத்துச் செல்வது போல வீட்டுக்குள் சென்றாள்.

“அய்ஸ்கிரீம் சாப்பிடுறாயா?”

“அய்ஸ்கிரீமா? அப்படின்னா?”

“அய்ஸ்கிரீம்னா அய்ஸ்கிரீம்தான்?”

“என்ன சுவையில இருக்கும்?”

“அய்ஸ்கிரீம் மாதிரித் தான் இருக்கும்”

“வேற ஏதாச்சும் இருக்கா?

“நூடுல்ஸ் சாப்பிடறியா?”

“கஞ்சி ஏதாச்சும் கிடைக்குமா?”

சமையல் அறைக்கு இருவரும் சென்றனர். நீநிக்குக் கஞ்சி வைக்க தெரியாது. ஆனாலும் சமையல் புத்தகத்தில் இருந்ததைப் படித்து செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் அந்த மிருகத்தை உள்ளே அழைத்துச் சென்றாள். புத்தகத்தில் சொன்னது மாதிரியே பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, கொஞ்சம் அரிசி போட்டு, கொஞ்சம் உப்பு போட்டனர். குட்டியான அந்த மிருகம் சமையல் அறையின் திட்டு மீது ஏறி பாத்திரத்தில் கஞ்சி தயாராவதை ஆர்வமாகப் பார்த்தது.
“சீக்கிரம் தயாராகாதா?’’ எனக் கேட்டது.

“அப்ப ‘கொதகொதகுள்ளா கொத-கொதகுள்ளா’ன்னு சொல்லிட்டு இரு, சிக்கிரம் தயாராகிடும்” என்று சொன்னாள் நீநிஜூஜு. அந்த மிருகமும் ‘கொதகொதகுள்ளா கொதகொத-குள்ளா’ன்னு ஜாலியா சொல்லிகிட்டே இருந்ததாம். கஞ்சி சீக்கிரம் தயாராகியும் விட்டதாம்.

துணியைக் கொண்டு அந்த சூடான பாத்திரத்தை எடுத்து வந்து முன் அறையில் அமர்ந்து-கொண்டனர். சூடு குறைவதற்காக ஒரு கரண்டியை வைத்து துழவிக்கொண்டே இருந்தாளாம் நீநிஜூஜு.

“ஆமா நீ யாரு? எங்கிருந்து வர்ர?”ன்னு கேட்டாள்.

“எங்களை டயனோசர்ன்னு கூப்பிடுவாங்க. நான் பல ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி இருந்து வர்ரேன். இப்ப எப்படி ஊர் உலகம் இருக்குன்னு பார்க்கலாம்னு வந்தேன். பசித்தது. அதனால் உன் வீட்டுக் கதவைத் தட்டினேன்.”

“ஓ நீ தான் டயனோசரா?” என்று சாதாரணமாகக் கேட்டாள் நீநி.

“ஆமா உன் பேரு என்ன டயனோசர்?”

“பேரா? அப்படின்னா”

“எனக்கு நீநிஜூஜுன்னு பேரு, எங்க அப்பா, அம்மா, நண்பர்கள் எல்லாம் நீநிஜூஜுன்னு கூப்பிடுவாங்க. உன்னை எப்படிக் கூப்பிடுவாங்க?”

“எனக்கு பேரு எல்லாம் இல்லை. நீயே ஒரு பேரு வையேன்”

“டினிகா. நல்லா இருக்கா?”

“அய்! டினிகா. நல்லா இருக்கு.”

அதற்குள் கஞ்சி ஆறி இருந்தது. டினிகா அதனை ருசித்துக் குடித்தது. நேரமாகிவிட்டது நான் கிளம்புகிறேன் என கிளம்பிச் சென்றுவிட்டது டினிகா. நீநிஜூஜுவும் உறங்கச் சென்றுவிட்டாள்.

கொஞ்ச நேரத்தில் ‘டொக் டொக் டொக் டொக்’ என்று மீண்டும் கதவு தட்டப்பட்டது. திறந்தால் மீண்டும் டினிகா. ‘இப்ப என்னப்பா? இப்பத் தான சாப்பிட்டுப் போன.?’

‘என்னை, குட்டியா மாத்தினியே… திரும்ப பெருசா மாத்து, எங்க இனத்தில என்னை சேத்துக்க மாட்டேங்குறாங்க’
‘ஓ, மறந்தே போயிட்டேன்.!’

இந்தா ‘பம்பம்போலே’… குடி!

28
பிஞ்சு & பிஞ்சுபிஞ்சு & பிஞ்சு4th July 2022
இண்டர்நெட் எக்ஸ்புளோரர் பணி ஓய்வு5th July 2022இண்டர்நெட் எக்ஸ்புளோரர் பணி ஓய்வு

மற்ற படைப்புகள்

2019_dec_a7
கதை கேளு கதை கேளுடிசம்பர் 2019
27th November 2019 by விழியன்

கடைசி நொடிகள்

Read More
16
அக்டோபர் 2024கதை கேளு கதை கேளுபிஞ்சு 2024
4th October 2024 by ஆசிரியர்

கதை கேளு… கதை கேளு…ரெடி…கெட்…செட்…கோ!

Read More
8
2024கதை கேளு கதை கேளுஜூலை 2024பிஞ்சு 2024
16th July 2024 by விழியன்

கதை கேளு… கதை கேளு…இந்த மலைக்கே

Read More
2020_oct_v10
அக்டோபர் 2020கதை கேளு கதை கேளு
14th October 2020 by விழியன்

வானவில்லின் வண்ண மகள்

Read More
2022_July_n1
ஜூலை 2022பிஞ்சுகள் பக்கம்
2nd July 2022 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
8
கதைகதை கேளு கதை கேளுசெப்டம்பர் 2023பிஞ்சு 2023
8th September 2023 by விழியன்

மொட்டைமாடி கூட்டாஞ்சோறு கலாட்டா

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p