இண்டர்நெட் எக்ஸ்புளோரர் பணி ஓய்வு
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணையதள உலாவியான (Browser) இண்டர்நெட் எக்ஸ்புளோரர் (Internet Explorer)
சேவை 2022 ஜூன் 15 உடன் நிறத்தப்பட்டுவிட்டது. ஏறக்குறைய 27 ஆண்டுகால பயன்பாட்டுக்குப் பிறகு இந்த உலாவியின் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கணினி, இணையம் ஆகியவை பரவலாக உலகெங்கும் வரத் தொடங்கிய காலகட்டமான 1995 ஆம் ஆண்டு விண்டோஸ் 95 இயங்கு தளத்துடன் வெளியிடப்பட்ட இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், 27 ஆண்டுகள் களத்தில் இருந்தது. இன்று கூகுள் குரோம், ஒபேரா, ஃபயர் பாக்ஸ் என்று பல உலாவிகளை நாம் பயன்படுத்துகிறோம். ஆனால், உங்கள் அப்பா அம்மாவிடம் கேட்டுப்பாருங்கள். அவர்களுக்கு அன்று இருந்த உலாவி இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் (சுருக்கமாக மிணி) தான்.
அதன் செயல் வேகம் குறையத் தொடங்கிய பின்னர் வேகமான பிரவுசர்களை நாம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். என்றாலும் போன தலைமுறையினர் மனதில் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்குத் தனியிடம் இருக்கும்.