சமூகநீதி நாள் உறுதிமொழி
- “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’
என்ற அன்பு நெறியையும் –
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல்
வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்!
- சுயமரியாதை ஆளுமைத் திறனும் – பகுத்தறிவுக்
கூர்மைப் பார்வையும் கொண்டதாக எனது
செயல்பாடுகள் அமையும்..!
- சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம்
ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான்
ஒப்படைத்துக் கொள்வேன்..!
- மானுடப் பற்றும் மனிதாபிமானமும் எனது
இரத்த ஓட்டமாக அமையும்..!
- சமூகநீதியையே அடித்தளமாக கொண்ட
சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர
இந்த நாளில் உறுதியேற்கிறேன்..!”
அரசு அலுவலகங்களிலும், கல்வி நிலையங்களிலும்
செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்தநாள் – சமூகநீதி நாள் அன்று
எடுக்கப்பட வேண்டிய உறுதிமொழி.
மானமிகு சமூகநீதிக்கான சரித்திர நாயகர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்
சட்டமன்றத்தில் 06.09.2021 அன்று செய்த பிரகடனம்.
செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்தநாள் – சமூகநீதி நாள் அன்று
எடுக்கப்பட வேண்டிய உறுதிமொழி.
மானமிகு சமூகநீதிக்கான சரித்திர நாயகர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்
சட்டமன்றத்தில் 06.09.2021 அன்று செய்த பிரகடனம்.