தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்-37
சொற்சொடர் அறிவோம்
நாம் எல்லோரும் பழங்குடியில் இருந்து வந்தவர்கள்தாம்! பேசாத பழங்குடியின மனிதர்கள் பேச ஆரம்பித்ததே மொழியினால்தான். இப்போது நாம் நாகரிகம் வளர்ந்த மனிதர்களாகிவிட்டோம். பல மொழிகள் தோன்றின. காலப்போக்கில்அவற்றில் பல அழிந்தன.
மொழிகள் அழியாமல் இருக்க இலக்கணம் வகுத்தலும் தொடர்ந்து பயன்படுத்துதலும் மிக மிக அவசியம். பயன்படுத்தாத மொழிகள் அழிந்துபோன அணுக்கள் போன்றவை.
தேவையான, அறிவுப் பூர்வமான மொழிகளை அழியாமல் காப்போம்.
தமிழ் மொழி உலகத்தில் நீங்காமல் நிற்பதற்கு நம் முன்னோர்கள் முறையான இலக்கணம் வகுத்தார்கள். தொடர்ந்து பயன்பாட்டிலும் எப்போதும் வைத்தார்கள்.
ஆங்கில மொழியும் அழியாமல் நிற்கிறது-. காரணம், முறையான ஆங்கில இலக்கணமும் தொடர்ந்து நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருவதுமே ஆகும்.
நாம் இவ்விரு மொழிகளையும் பிழையின்றி எழுத-_முறையான இலக்கணத்தைப் படித்து வந்தோம்.
இன்னும் நிறைய இலக்கணம் படிப்போம். அந்த வரிசையில் இப்போது நாம் பார்க்க இருப்பது:
Simple Sentence (எளிய சொற்றொடர்)
Compound Sentence (கூட்டுச் சொற்றொடர்)
Complex Sentence (கலப்புச் சொற்றொடர்)
1. SIMPLE SENTENCE (எளிய சொற்றொடர்)
ஆங்கிலச் சொற்றொடரில்… Subject + Verb + Object என்ற வரிசையில்… அதாவது எழுவாய், வினைச்சொல், பயனிலை (அல்லது வினைமுற்றுச் சொல்) என்ற வரிசையில் வந்து ஒரு சொற்றொடர் இருந்தால் அது (Simple Sentence) எளிய சொற்றொடர்.
(தமிழில் எழுதும்போது… மேலே சொன்ன வரிசை மாறுபடும். ஆனால், பொருள் மாறாது)
குறிப்பு (Clue):
ஆங்கிலச் சொற்றொடரில்… முக்கியமாக ஒரே ஒரு வினைச்சொல் (Verb)மட்டுமே வந்து நிறைவடையும் ஒரு சொற்றொடர்.
(எ.கா.)
- Ragul Gandhi goes on a long Walking Tour.
ராகுல் காந்தி நீண்ட நடைப்பயணம் போகிறார்.
- The sun rises in the east.
சூரியன் கிழக்கில் உதிக்கிறது.
2. COMPOUND SENTENCE (கூட்டுச் சொற்றொடர்):
ஆங்கிலச் சொற்றொடரில்… ஒன்றையொன்று சாராமல் (Independent Clauses) தொடர்ந்து வரும் இரண்டு எளிய சொற்றொடர்களை and, or, but
போன்ற இணைப்புச் சொல்லால் இணைப்பது கூட்டுச் சொற்றொடர் (Compound Sentence) எனப்படும்.
குறிப்பு (Clue):
இரண்டு எளிய சொற்றொடர்களுக்கு இடையில் ஓர் ஒத்துழைப்பு இணைப்புச் சொல்(co-ordinating) வரும் (FANBOYS = For, And, Nor, But, or, Yet, So) (ஏற்கெனவே அத்தியாயம்- _13இல் படித்துள்ளோம்.)
(எ.கா.)
- Ragul has been going on a long walking tour and he has been worrying about the people of India.
ராகுல் நீண்ட நடைப்பயணம் போய்க் கொண்டிருக்கிறார். மேலும் அவர் மக்களைப் பற்றி கவலை கொண்டிருக்கிறார்.
- Akilan celebrates Pongal. But he doesn’t celebrate Diwali
அகிலன் பொங்கல் விழாவைக் கொண்டாடு-கிறார். ஆனால் அவர் தீபாவளியைக் கொண்டாடு-வதில்லை.
3. COMPLEX SENTENCE (கலப்புச் சொற்றொடர்):
ஆங்கிலச் சொற்றொடரில்… சார்ந்து வரும் சொற்றொடரும் (Dependent Clause), சாராமல் வரும் சொற்றொடரும் (Independent Clause)
சார்பு இணைப்புச் சொல்லால் இணைக்கப்பட்டு வருவது கலப்பு சொற்றொடர்(Complex Sentence)
எனப்படும்.
குறிப்பு (Clue):
இரண்டு சொற்றொடர்களுக்கு இடையில் Though, Eventhough, Because, If, While, Who…
போன்ற சார்பு இணைப்புச்சொல்(Sub-ordinate Conjunction) வரும் (ஏற்கெனவே அத்தியாயம்-_14இல் படித்துள்ளோம்!)
(எ.கா.)
- Eventhough he was wounded in his leg, he participated in foot ball.
அவருக்கு காலில் காயம்பட்ட போதிலும், அவர் கால்பந்து விளையாட்டில் கலந்துகொண்டார்.
- If we concentrate in our work, nobody can disturb us
நம்முடைய வேலையில் நாம் கவனமாக இருந்தால், எவராலும் நம்மைத் தொந்தரவு செய்ய முடியாது.
(தொடரும்)