நான் தேடிப்பிடிச்சுக் கத்துக்கிட்ட விஷயத்தை உங்களுக்கு சொல்லலாம்னு வரும்போது, என் காலு ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வுனு ஆகுது. ஆமா அதைப் பத்தித் தான் சொல்ல வந்தேன். கால் மரத்துப் போய், நாம உடனே எழுந்தால், அந்த இடம் ஏன் ஜிவ்வுன்னு ஆகுது?
நான் தேடிப்பிடிச்சுக் கத்துக்கிட்ட விஷயத்தை உங்களுக்கு சொல்லலாம்னு வரும்போது, என் காலு ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வுனு ஆகுது. ஆமா அதைப் பத்தித் தான் சொல்ல வந்தேன். கால் மரத்துப் போய், நாம உடனே எழுந்தால், அந்த இடம் ஏன் ஜிவ்வுன்னு ஆகுது?
நம்ம உடல் முழுவதும் நரம்புகள் இருக்கு. இந்த நரம்புகள் தான், உடலின் மற்ற பகுதிகளுக்கு மூளை அனுப்பும் செய்தியைச் சரியாகக் கொண்டுபோய்ச் சேர்க்கும். அதேபோல உடலின் பகுதிகள் அனுப்பும் செய்தியை, மூளைக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும். கை, கால் மரத்துப்போவதற்கும், நரம்புக்கும் என்ன தொடர்பு?
தொடர்பு இருக்கே! இன்னும் சொல்லனும்னா, அது தான் காரணமே!
இரவு முழுவதும், கையைத் தலைக்கடியில் வைத்துத் தூங்கும் போது, நம்ம தலையின் மொத்தக் கனமும் கையின் மேல் தான் விழும். அப்போ, இந்த பகுதிகளில் இருக்கும் நரம்புகளின் மேலே அழுத்தம் கொஞ்ச கொஞ்சமாக அதிகமாகும். நல்லா தூங்கி எழுந்ததும் கையை வேற Position-க்கு மாற்றும்போது அந்த நரம்பிலிருக்கும் அழுத்தம் குறையும் இரத்த ஓட்டம் பாயும். இதனாலேயும் நமக்கு ஜிவ்வுன்னு ஆகும்.
கை, கால் தற்காலிகமாக மரத்துப் போவதற்கு, நரம்பின் மீதான அழுத்தம், நீரிழப்பு, சரியான இரத்த ஓட்டமின்மை போன்றவை சில காரணங்கள். தற்காலிகமாக இப்படி மரத்துப் போவது, பொதுவாக சில நிமிடங்களில் சரி ஆகிவிடும். சிலருக்கு, நிரந்தரமாக மரத்துப்போகும் வாய்ப்பும் இருக்கு. இதற்கு, நரம்பு மண்டலப் பிரச்சனை முக்கியக் காரணமாக இருக்கலாம். அதற்கான மருத்துவம் செய்துதான் குணமாக்க முடியும்.<