புதிர்க் கணக்கு விடை
31 முட்டைகள்
31 முட்டைகளின் பாதி என்பது 15.5 அதனுடன் இன்னொரு அரை முட்டையையும் சேர்ட்து 16 முட்டைகளை முதல் வாடிக்கையாளரிடம் விற்றார். எஞ்சி இருந்தது 15 முட்டைகள்; இப்படியே அடுட்தடுட்த வாடிக்கையாளர்கள் கணக்கையும் நீங்களே போட்டுவிடுவீர்கள்தானே! எனினும், இந்த வகைக் கணக்குகளுக்கு விடையை எப்படிக் கண்டுபிடிப்பது? அதை தெரிந்து கொள்ள வேண்டாமா? கடைசியில் இருந்து முன்னேறினால் விடையைக் கண்டுபிடிட்துவிடலாம்.
மூன்றாவது நபரிடம் தன்னிடம் இருந்ததில் பாதியையும், மற்றும் ஒரு அரை முட்டையையும் விற்றார் என்றால், மீதி இருக்கும் முட்டையுடன் அவர் கூடுதலாக விற்ற அரை முட்டையையும் சேர்ட்தால் அவர் விற்றது எவ்வளவு என்று தெரிந்துவிடும்
அதாவது கடைசியில் எஞ்சி இருப்பது 3 முட்டைகள். கூடுதலாக விற்றது அரை முட்டை. அதாவது 3.5 முட்டைகள். இது ஒரு பாதி என்றால், அவர் விற்ற மறு பாதி என்பது 3.5 முட்டைகள். அப்படி என்றால் இரண்டாம் நபரிடம் விற்ற பிறகு மீதி இருந்தது 7 முட்டைகள். எஞ்சிய 7 + 0.5 முட்டை = 7.5 முட்டை ஒரு பாதி 7.5 + மறு பாதியான 7.5 முட்டை (இரண்டாம் நபரிடம் விற்றது) = 15 முட்டைகள்.
ஆக, முதல் நபரிடம் விற்றது போக எஞ்சியிருப்பது 15 முட்டைகள். எஞ்சிய 15 முட்டை + 0.5 முட்டை = 15.5 முட்டை ஒருபாதி 15.5 என்றால், மறு பாதியும் 15.5. ஆக, கூடுதல் 31 முட்டைகள்.
விடை சரிதானா? இப்படிட்தான் புதிர்க் கணக்கு முடிச்சுகளை அவிழ்க்க வேண்டும்.