செய்து அசத்துவோம் – தீப்பெட்டி தந்திரம்
வாசன்
பக்கம்: 1
தேவையான பொருட்கள்:
1. ஆறு அல்லது ஏழு குச்சிகளுடன் கூடிய ஒரு தீப்பெட்டி
2. பழைய ஒரு ரூபாய் நாணயம்
பக்கம் 2
1. ஆறு அல்லது ஏழு குச்சிகளுடன் கூடிய ஒரு தீப்பெட்டியை எடுத்துக் கொள்ளவும். உங்களது நண்பர்களை அழைத்து, அவர்களிடம் “இது ஒரு ‘மந்திரத் தீப்பெட்டி’. இதை மேல்நோக்கி சுண்டிவிட்டால் கீழே வந்து விழும் போது எப்பொழுதுமே மேல் பக்க லேபிள் தெரியும்படிதான் தரையில் விழும்’’ என்று கூறுங்கள். அதைப் போலவே மீண்டும், மீண்டும் சுண்டிவிடுங்கள். எத்தனை முறை சுண்டிவிட்டாலும் தரையில் விழும் போது மேல் பக்க லேபிள் தெரியும்படிதான் விழும். இதைக் கண்டு உங்களது நண்பர்கள் அதிசயத்தில் வியப்பில் மூழ்குவார்கள்.
பிறகு எப்படிச் செய்தீர்கள் என்பதை அவர்களுக்கு விளக்கி, “மந்திரமில்லை, எல்லாம் தந்திரம்’’ என்று புரிய வையுங்கள். கூடவே புவிஈர்ப்பு விசையின் காரணமாக எடை அதிகம் உள்ள அடிப்பாகம் கீழே வந்து விழுவதையும் புரியவையுங்கள்.
தந்திரம் என்ன?
தீப்பெட்டியின் அடிப்பாகத்தில் படத்தில் உள்ளது போல, பழைய ஒரு ரூபாய் நாணயத்தை வெளியில் தெரியாதபடி சொருகி வைக்கவும். இப்பொழுது நீங்கள் சுண்டிவிடும் போது நாணயத்தின் எடை காரணமாக தீப்பெட்டி எப்பொழுதும் மேல் பக்கம் தெரியும் படியாகவே கீழே வந்து விழும்.
முதலில் இதை நீங்கள் தனியாகச் செய்து பார்த்துக் கொள்வது நல்லது.<