தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சிவை அறிவோம் : வினை உரிச் சொற்கள் [ADVERBS] – 16
கே.பாண்டுரங்கன்
பெரியார் பிஞ்சுகளே! அருமை நெஞ்சங்களே! மீண்டும் நம் நினைவுக்கு ….
Coordinating Conjunctions =
ஒத்துழைப்பு இணைப்புச்சொற்கள்
சுருக்க முறை :FANBOYS [For, And, Nor, But, Or, Yet, So]
Subordinate Conjunctions =
சார்பு இணைப்புச் சொற்கள்
சுருக்க முறை : A WHITE BUS [Although, After, When, Hence, If, Though, Even If, Because, Unless, Until, Since]
Correlative Conjunctions =
தொடர் இணைப்புச் சொற்கள்
சுருக்க முறை:
B-E-NN-NSW (பென்ன்ன்ஸ்டபுள்யூ) [Both…And, Either…Or, Neither…Nor, Not only…But also, Such…that, So…that, Whether…Or]
இந்த மூன்றுவகை மட்டும்தானா இணைப்புச்-சொற்கள்? இன்னும் பொதுவான சில இணைப்புச்சொற்களும் [Alternatively, Likely….etc.] உள்ளன.
அவற்றை எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம்.
அதற்கு முன்…
இரயிலை ஏன் “தொடர் வண்டி’’ என்கிறோம்?
வண்டியில் வெறும் எஞ்சின் மட்டும் ஓடினால் ‘தொடர்வண்டி’ ஆகுமா?
“சொற்றொடர்’’ என்பது தொடர் வண்டி போன்றது.
சொற்றொடரில் பெட்டிகள் போன்று Pronoun, Noun, Verb, Article, Preposition Adjective… என்றவாறு பல பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. அதில் ஒரு கூடுதல் பெட்டி போன்றதுதான்.
‘Adverb’
Adverb – க்கு தமிழில் ‘வினைஉரிச்சொல்’ என்று பெயர்.
சில இரயில்களில், இரயில் புறப்படும்முன், பயணிகள் கூட்டம் அதிகமானால் கூடுதலாக ஒன்றிரண்டு பெட்டிகளை (Additional Coaches) இணைப்பார்கள்.
கூடுதல் பெட்டி தனித்து இருக்கும் போது அது பயனில்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். அது போலத்தான், வினைஉரிச்சொல் [Adverb] தனித்து இருக்கும்போது பொருள் தராது. ஆனால்,
சொற்றொடர்களில் Verb-க்கு Adverb கூடுதல் சிறப்புப்பெட்டி போல் அமைந்து சிறப்புக்கூட்டும். [அதாவது வினைச்சொல்லுக்கு வினை உரிச்சொல் சிறப்புக்கூட்டும்]
வினைஉரிச்சொல் [Adverb] பற்றி இன்னும் தெளிவாகப்பார்ப்போமா?
வினைஉரிச்சொல் [Adverb]
பெயரிலேயே வருகிறது பாருங்கள்…
Ad*’verb’= வினை ‘உரிச்சொல்’
வினைச்சொல்லைப் பற்றி விளக்கிக்காட்டும் (உரித்துக்காட்டும்) சொல்.
அதாவது (Verb) வினை அல்லது செயல் எங்கே, எப்படி, எப்பொழுது, ஏன் செய்யப்பட்டது என்பதைப் பற்றி சொல்லும் சொல்தான் வினை உரிச்சொல் [Adverb]
ஓர் எடுத்துக்காட்டு பாருங்கள்!
“I drank water fully”
‘’நான் (வயிறு) நிறைய தண்ணீர் குடித்தேன்.”
இந்த சொற்றொடரில்…
“நான் தண்ணீர் குடித்தேன்’’ என்பது ஒரு சாதாரண சொற்றொடர்.
ஆனால் “குடித்தேன்’’ என்ற வினைச்சொல்லைப் பற்றி விளக்கமாக… “நிறைய’’ குடித்தேன் – என்று சிறப்பு செய்து சொல்லும் சொல்லைத்தான் வினைஉரிச்சொல் [Adverb] என்கிறோம்.
இந்த “வினைஉரிச்சொல்’’ [Adverb] ஒரு வகையான வினையெச்சச் சொல். அதாவது சொல் இலக்கணப்படி [Grammatically] ஒரு குறைச்சொல். ஆனால் வினைச்சொல்லுக்கு சிறப்பு சேர்க்கும் சொல்.
இதுவரை, வினைஉரிச்சொல் [Adverb] என்ன என்பதைப் பார்த்தோம். அந்த வினை உரிச்சொற்களில் சில சொற்கள் இணைப்பு வினை உரிச்சொற்களாக பங்குகொள்கின்றன. அவற்றைப் பற்றி பார்ப்போம்.
இணைப்புவினைஉரிச்சொல்
[Conjunctive Adverb]
தொடர் வண்டிகள் சிறப்பு இணைப்புகள் இருந்தால்தான் ‘சிறப்புத் தொடர்வண்டி’. அந்த வகையில், சிறப்பு இணைப்புப்பெட்டிகள் [Special coach for Emergency] போலவும் சில வினைஉரிச்சொற்கள் [Adverb] செயல்படும். அதாவது
வினைஉரிச்சொல் [Adverb] இரு சொற்றொடர்களுக்கு இடையே இணைப்புச் சொல்லாகவும் [Conjunction–ஆகவும்] செயல்படும்.
அதனால்தான் அவ்வாறு செயல்படும் Adverb–களை“இணைப்பு வினைஉரிச்சொற்கள்’’ [Conjunction Adverb] என்போம்.
இவ்வகை இணைப்புச் சொற்களுக்கு Adverbial Conjuctions என்றும் ஆங்கிலத்தில் பெயருண்டு.
இவை சொற்றொடர்களில் பயன்படும்போது Subordinate Conjuction [சார்பு இணைப்புச்சொற்கள்] [When, Although, Because] போலத்தான் இருக்கும். ஆனால் இரண்டு Independent Clause – களுக்கு [சார்பற்ற சொற்றொடர்களுக்கு] இடையில்தான் Conjunctive Adverb [இணைப்புவினைஉரிச்சொற்கள்] இடம் பெறும்.
இப்போது Conjunctive Adverb [இணைப்புவினைஉரிச்சொற்கள்] எவை எவை என்று பார்ப்போம்.
“ACT LUFSH’’ “ஆக்ட் லூஃப்ஸ்’’ என்று சுருக்கமாக, நம் வசதிக்கு நினைவில் கொள்ளலாம்
A = Accordingly [அதன்படி]
C = Consequently [அதன் தொடர்ச்சியாக]
T = Therefore [ஆக]
L = Likewise [அதுபோல்]
U = Unlikely [அதுபோலில்லாமல்]
F = Finally [முடிவாக]
S = Similarly [அதைப்போலவே]
H = However [ஆயினும்]
-போன்றவை சில.
இணைப்புவினைஉரிச்சொற்களுக்கு [Conjunctive Adverb] சில சொற்றொடர் எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.
You Challanged to speak in English with in one month. Accordingly, you have done it.
ஒரு மாதத்திற்குள் ஆங்கிலம் பேச சபதம் எடுத்தாய். அதன்படி, முடித்துக் காட்டினாய்.
It has rained yesterday night. Consequently, It is raining tonight.
நேற்று இரவு மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இன்று இரவும் மழை பெய்கிறது
Senthil gets up earlier. Therefore, he is ready for Jagging,
செந்தில் அதிகாலை விழித்தெழுகிறார். ஆக, அவர் சீர் ஓட்டப்பயிற்சிக்குத் தயாராகிவிட்டார்.
His father is Brilliant. Likewise, his son is also Brilliant.
அவருடைய அப்பா மிக புத்திசாலி. அதைப்போல், அவருடைய மகனும் புத்திசாலி.
Lion eats meat. Unlikely, Camel eats greens.
சிங்கம் இறைச்சி தின்கிறது. அதைபோலில்லாமல், ஒட்டகம் கீரை உண்கிறது.
Schools have been closed due to pandemic situation, Similarly, Colleges have been closed.
வைரஸ் தொற்று காரணமாக மூன்று மாதமாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. அதைப்போலவே, கல்லூரிகளும் மூடப்பட்டிருக்கின்றன.
Most of the people have been affected by Corona virus. However, Some of them are recovering.
கொரோனாவால் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். ஆயினும், அவர்களில் சிலர் குணமடைந்து வருகின்றனர்.
(தொடரும்)