தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சிவை அறிவோம் : நேர்க்கூற்று , அயற்க்கூற்று(direct speech and indirect speech)
‘சைகை’ தான் முதல் மொழி. சைகைகளால் உருவான மொழி ‘உடல் மொழி’(Body language).. உடல் மொழியால் எல்லாவற்றையும் சொல்ல முடியாமல் போனபோது மனிதன் கண்டுபிடித்ததுதான் வாய் மொழி (Tongue Language).
வாய் மொழி மக்கள் வாழ்ந்த இடம் சார்ந்து வளர்ந்தது.
மொழிகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, ஆங்கிலம், வங்காளம் என மலர்ந்தனஞ்
பிறகு… எல்லா மொழியிலும் பேச மட்டுமல்லாமல், எழுதவும் செய்தார்கள். அப்படிப் பேசும்போதும், எழுதும் போதும்
ஓர் ஒழுங்கு முறை தேவைப்பட்டது. இலக்கணம் தேவைப்பட்டது.
அதாவது சொற்றொடரைத் தவறில்லாமல் பேசினால்தான் அல்லது எழுதினால்தான் அனைவரும் புரிந்துகொள்ள முடியும் அல்லவா?
அவ்வாறு_
இருவர் தனித்தனியாகவோ, நண்பர்கள் சேர்ந்தோ, குழுவாகப் பேசுவதை உரையாடல் என்கிறோம்.
அப்படி உரையாடுதல் நேரடியாகவும் நடக்கலாம்ஞ். மறைமுகமாகவும் நடக்கலாம்.
அவ்விதமான உரையாடல் சொற்றொடர்களைத் தான் கூற்று என்னும் மற்றொரு தமிழ்ச் சொல்லால் அழைக்கிறோம்.
கூற்று என்னும் தமிழ்ச் சொல்லை ஆங்கிலத்தில் Speech எனலாம்.
ஆங்கிலத்தில் Speech என்பதை Direct Speech, Indirect Speech என்று இரண்டாகப் பிரித்துள்ளார்கள்ஞ்.
தமிழிலும் கூற்றை _ நேர்க்கூற்று, அயற்கூற்று என்று இரண்டாகப் பிரித்துள்ளார்கள்.
கூற்று எவ்விதம் பயனாகிறது? கூற்று எப்படி இருக்க வேண்டும்? ஒரு கூற்று இன்னொரு கூற்றாக மாறுவதெப்படி அல்லது மாற்றுவதெப்படி?
நேர்க் கூற்றா? அயற்கூற்றா? கண்டுபிடிப்பது எப்படி? அதனை விளக்கமாகப் பார்ப்போம்.
1. நேர்க்கூற்று (Direct Speech) :
நேரடியாகக் கூறுவது அல்லது நேரடியாகப் பேசுவது. கி என்கிற ஒருவரும் ஙி என்கிற ஒருவரும் உரையாடுவதாகக் கொள்வோம்.
எதை வைத்து ஓர் உரையாடல் நேர்க்கூற்று என்று கண்டுபிடிப்பது?
எழிலரசன், “நான் ஒரு நேர்மையான அதிகாரி” என்று புவியரசனிடம் சொன்னார்.
Ezhilarasan said to Puviyarasan, “I am an honest officer”
மேலே சொன்ன எடுத்துக்காட்டில் வரும் இரட்டை மேற்கோள் குறிகள் (“ ” ) பயன்படுத்தப் பட்டாலே அது நேர்க்கூற்று (Direct Speech) ஆகும்.
இரட்டை மேற்கோள் குறிகள் (“ ”) ஒருவருக்கு ஒருவர் நேரடியாகப் பேசும்போது பயன்படுத்தப்படும் குறியீடுகள் ஆகும். இதுவே போதும் _ இது நேர்க் கூற்று என்று கண்டுபிடிப்பதற்கு. அதாவது நாம் நேர்க்கூற்றில் எழுதும்போது. பேசியவர் யார்? யாரிடம் பேசினார்? என்ற விவரங்களை நேரடியாகவே அவர் பேசியது போலவே விவரிப்போம்.
2. அயற்கூற்று (Indirect Speech):
நாம் பேசியதை வேறு ஒருவர் (அயலார்) பேசுவது (அல்லது)
வேறொருவர் பேசியதை நாம் எடுத்துச் சொல்லுவது.
இன்னும் தெளிவாகச் சொல்வது என்றால்ஞ்
எதை வைத்து ஓர் உரையாடல் அயற்கூற்று என்று கண்டுபிடிப்பது?
எழிலரசன் தான் ஒரு நேர்மையான அதிகாரி என்று புவியரசனிடம் சொன்னார்.
Ezhilarasan told Puviyarasan that he was an honest officer
எழிலரசன் புவியரசனிடம் சொன்னதாகச் சொல்கிறோம் அல்லவா? இது தான் அயற்கூற்று. (Indirect Speech)
மேலே சொன்ன எடுத்துக்காட்டில் இரட்டை மேற்கோள் குறிகள் (“ ”) எங்குமே பயன்படுத்தப்படவில்லை. _ அல்லவா? அதனால் இந்த சொற்றொடர் அயற்கூற்று என்பதை எளிதாகக் கண்டுபிடிக்கலாம். (அதற்காக இரட்டை மேற்கோள் குறி இல்லாத எல்லா வாக்கியங்களும் அயற்கூற்று என்று கருதக் கூடாது. ஒருவர் மற்றொருவரிடம் சொன்னதாக வரும் சொற்றொடரில் தான் இரட்டை மேற்கோள் குறி பற்றி நாம் கவனிக்க வேண்டும்).
குறியீட்டை வைத்து நேர்க்கூற்று எது, அயற்கூற்று எது என்று கண்டுபிடித்தோம். இனி இரண்டையும் தனித்தனியே விவரமாகவும், விளக்கமாகவும் பார்ப்போம். அதற்கு அடிப்படையான இலக்கணமும்(Grammar) தெரிந்துகொள்வோம்.
இலக்கணப் பயிற்சிக்காக, நேர்க்கூற்றிலிருந்து அயற்கூற்றுக்கு எப்படி மாற்றுவது?
அயற்கூற்றிலிருந்து நேர்க்கூற்றுக்கு எப்படி மாற்றுவது?
ஒரு கூற்றிலிருந்து மற்றொரு கூற்றுக்கு மாற்றும் போது என்ன என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்?
_ இவற்றையெல்லாம் இனி பார்ப்போம்.
அதற்குமுன் உரையாடல்கள் எந்த எந்த வகையான சொற்றொடர்களில் நடைபெறும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
உரையாடுவதற்கு நான்கு வகையான சொற்றொடர்கள் தேவைப்படுகின்றன.
சாதாரணச் சொற்றொடர்[(Declarative/ Statement/Simple Sentence]
கட்டளைச் சொற்றொடர்[Imperative Sentence]
கேள்விச் சொற்றொடர்[Question / Interrogative Sentence]
உணர்ச்சிச் சொற்றொடர் [Exclamative Sentence]
இவற்றைப் பற்றி முதலில் தெரிந்து கொண்டால் தான் நேர்க் கூற்றினை அயற்கூற்றாக மாற்றுவதைப் புரிந்து கொள்ள முடியும். வரும் இதழில் அதுபற்றி விரிவாகப் பார்ப்போம்.<